உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462

எடு :-

66

இளங்குமரனார் தமிழ்வளம்

4

'ஒழுகொளி விரிந்த கதிர்மணி வண்ண

னுந்தியந் தாமரை வந்தோன் முழுமதிக் கலையு ணிறைந்தபே ரழகை மொண்டு கொண் டரிபரந் தகன்ற மழைமதர் நெடுங்கண் தமயந்தி வதனம் வகுத்தனன்.'

இதில், காரணமாகச் சொல்லப்பட்ட சந்திர சாரத்தினால் உயர்வுடைய முகத்தழகாகிய காரியந் தோன்றிற்று.

காரணமாலையணி

பின்பின்னாக வருவன வற்றிற்கு முன்முன்னாக வருவன காரணங்களாகவேனும் காரியங்களாகவேனுஞ்

வற்றைக்

சொல்லுவது காரணமாலையணியாம். இதனை வடநூலார் காரணமாலா' என்பர்.

எடு :-

“நீதியாற் செல்வ நிகழ்செல்வத் தாற்கொடைமற்

றோதுகொடை யாற்சீர் உள.

இதில், நீதிமுதலியன செல்வ முதலியவற்றிற்குக் காரணமா தலையறிக.

“படர்நரகம் பாவத்தாற் பாவம் மிடியால்

மிடியீவி லாமையினா மே.”

இதில், நரகம் முதலியன பாவமுதலியவற்றிற்குக் காரிய மாதல் காண்க.

காரண வொழிப்பணி

இது ஒழிப்பணி வகைகளுள் ஒன்று. சிறப்பு, பண்பு ஆகிய உண்மை நிலைகளைக் காரணத்தோடு ஒழிப்பது காரணவொழிப் பணியாம்.

எடு :-

“பொங்கு வெம்மை பொழிதலி னாலிது

திங்க ளன்று தினகரன் தானன்று