உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

கங்கு லாதலி னாற்கட னின்றெழீஇத்

463

தங்கு றும்வட வைத்தழ லாகுமே.

காரியப் புனைவிலி புகழ்ச்சியணி

இதுவும் புனைவிலி புகழ்ச்சியணி வகைகளுள் ஒன்று. உவமானமாகிய காரியத்தில் உவமேயமாகிய காரணந் தோன்று

தலாம்.

எடு :-

“மருக்கமழ்பூங் கோதை மடநடையைக் காணில் செருக்கடையா தன்னத் திரள்.

இதில்,

செருக்கடையாமையாகிய

காரியத்தினாலே

மெல்லிய நடையழகாகிய காரணந் தோன்றிற்று.

காவியலிங்கவணி

புலவரால் யாப்பினுள் முதலே வெளிப்படையாகக் கூறப் பட்ட வினையாதொன் றவ்வினைக்கு எதிர்ப்பட்டதனால் உண்டான வினையும் அவ்வினையாலான காரியங்களும் எஞ்சி நிற்க அக்காரியங்களைக் குறித்துண்டாய தொழில்

கேட்போருள்ளுறுத்துக் கொள்வதாகிய குறிப்பைத்தருவது காவியலிங்கவணியாம்.

எடு :-

“சேதாம்பல் மலர்த்தடஞ்சூழ் சேறை மாயோன்

சிறைக்கருடன் றுணைப்புயத்திற் செகத்தைத் தாய

பாதார விந்தமலர் பதித்த காலைப்

பணைத்தெழலு மனு வெருவிப் பனுவ லார்ந்த வேதாவை நோக்கினன்றன் குருவைப் பார்த்தான்

விண்ணவர் கோன் புகரினைவீ டணனும் பார்த்தான்

மூதாதை யொடுமுணர்த்த வுணர்ந்த பின்னர்

முத்த ரொடுந் திருவடிக்கீழ் முன்னி னாரே.

இதில் சேறைமாயோன் கருடன் துணைப் புயத்திற் திரு வடியைப் பதித்த காலை யென்பதும், அக்கருடன் பணைத் தெழலும் என்பதும் வெளிப்படக்கிளந்தவினை. அக்கருடன் சிறகரை யசைத்துச் சண்ட வாயு வினையெழுப்ப என்னும் வினையும், அச்சண்ட வாயும்

அவ்வினையாலாய

6