உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464

4 இளங்குமரனார் தமிழ்வளம்

வடவாக்கினியை யெழுப்புதலும், மீண்டும் அவ்வாயுத்தானே சமுத்திரங்களிற் சல முவட்டெடுத்து நிற்கும் நிலையை விட்டு வழிந்து பொங்க வெழுப்புதலுமாகிய மூவகை வினை விளை பயனெஞ்சி யாப்பினுட் கூறப்படாமல் மறைந்து நின்றன.

குணக்குறை விசேடம்

இதுவும் விசேடவணி வகைகளுள் ஒன்று. குணத்திற் குறை கூறிக் காரியத்தில் உயர்வு தோன்றக் கூறுவது குணக்குறை விசேடம் என்னும் அணியாம்.

எடு :

“கோட்டந் திருப்புருவங் கொள்ளா வவர்செங்கோல் கோட்டம் புரிந்தகொடைச் சென்னி - நாட்டம்

சிவந்தன வில்லை; திருந்தார் கலிங்கம்

சிவந்தன செந்தீத் தெற.

குணத்தன்மையணி

இது தன்மையணி வகைகளுள் ஒன்று. குணத்திலுள்ள பலவிதமான இயல்புகளை உள்ளவாறே அழகுறப் பாடுவது. எடு :-

உள்ளங் குளிர வுரோமஞ் சிலிர்த்துரையும்

தள்ளவிழி நீரரும்பத் தன்மறந்தாள் - புள்ளலைக்கும் தேந்தா மரைவயல்சூழ் தில்லைத் திருநடஞ்செய் பூந்தா மரைதொழுத பொன்.”

இது கடவுளை வணங்குதலால் உண்டாகும் ஆனந்தத்தின் தன்மையைக் கூறியதனால், குணத்தன்மையாம்.

குணவேற்றுமையணி

கூற்றினாலாவது குறிப்பினாலாவது பண்பு ஒப்புமை யுடைய இருபொருளை ஒருபொருளாக வைத்து இவற்றைத் தம்முள் வேற்றுமைப்படச் சொல்லுவது குணவேற்றுமை யணியாகும்.

எடு :-

66

சுற்றுவிற் காமனுஞ் சோழர் பெருமானாம்

கொற்றப்போர்க் கிள்ளியுங் கேழொவ்வார் பொற்றொடியே!