உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

465

ஆழி யுடையான் மகன்மாயன் செய்யனே கோழியுடையான் மகன்.

குறிநிலையணி

وو

புகழ்பொருளை உணர்த்துஞ் சொற்களால் குறித்தறி தற்குத் தகுதியாகிய பொருளைச் சொல்லுதலாம். வடநூலார் 'முத்திராலங்கார’ மென்பர்.

எடு :-

"மந்தா கினியணி வேணிப் பிரான் வெங்கை மன்னவநீ கொந்தார் குழன்மணி மேகலை நூனுட்பங் கொள்வ தெங்ஙன் சிந்தா மணியுந் திருக்கோவை யுமெழுதிக் கொளினும் நந்தா வுரையை யெழுதலெவ் வாறு நவின்றருளே.'

குறிப்பு நவிற்சியணி

""

தனை

ஒரு பொருளைக் குறித்துச் சொல்ல வேண்டியதை மற்றொரு பொருளைக் குறித்துச் சொல்லுதலாம். ஒட்டணி, பிறிது மொழிதல், நுவலாநுவற்சி என்பனவும் இது. இதனை வடநூலார் 'கூடோக்தியலங்கார’ மென்பர்.

எடு :-

66

"பிறன்புலத்தில் வாய்நயச்சொல் பெட்புடன் கொள்காளாய் இறைவனடை கின்றனன்விட் டேகு."

இதில், மறைவிடத்தில் பிறன்மனையாள்வாய்ச் சொல்லைக் கேளாநிற்கும் விடனைக் குறித்துச் சொல்ல வேண்டியதைப் பிறன் விளைநிலத்தின் நெல்லை மேய்கின்ற எருதைக் குறித்துச் சொல்லியதைக் காண்க. சொல் - நெல்லும், மொழியுமாம்.

குறை ஒற்றுமை உருவகம்

குறைவில்லாமையைக்

காட்டி உருவகிப்பது குறை

ஒற்றுமை உருவகம் என்னும் அணியாம்.

எடு :-

66

“எல்லாரும் ஏத்துபுகழ் ஏந்தலிவன் நெற்றிவிழி இல்லாத சங்கரனே காண்.'

99