உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466

இளங்குமரனார் தமிழ்வளம்

4

இதில் நெற்றிக்கண் சங்கரனுக்கு ஒரு குறையாகக் கொள்ளப் படுகின்றது. அந்தக் குறையும் இல்லாத சங்கரன் என்று ஒருவன் புகழப் பெறுவதால் குறை ஒற்றுமை உருவகம் ஆகின்றது.

கூடசதுக்கம்

து சித்திரக் கவிவகைகளுள் ஒன்று. இறுதியடியில் உள்ள எழுத்துக்கள் மற்றை மூன்று அடிகளுள்ளும் மறைந்து நிற்கப்பாடுவது கூட சதுக்கமாம்.

எடு :-

“புகைத்தகைச் சொற்படைக் கைக்கதக் கட்பிறைப் பற்கறுத்த பகைத்திறச் சொற்கெடச் செற்றகச் சிப்பதித்துர்க்கை பொற்புத் தகைத்ததித் தித்ததுத் தத்தசொற்றத்தைப் பத்தித்திறத்தே திகைத்தசித் தத்தைத் துடைத்தபிற் பற்றுக் கெடக்கற்பதே."

கூட்டவணி

இவ்வணி இரண்டு வகைப்படும்.

(1) பகையில்லாமல் ஒரு காலத்தில் கூடத்தக்க பொருள் களுக்குக் கூட்டத்தைச் சொல்லுதல்.

எடு :

கூடின.

எடு :-

நின்சீ ருருவு வெளிப்படுத னோக்கி நோக்கி நிலைதளரும் என்பூ டுருக விளமுலைமேற் புல்லு முனிந்தா யெனவருந்தும் அன்போ டூடறீர்த்த னன்போ னகைக்கு மகன்றா யென வெளியிற் பின்போ தருநல் லுணர்விழந்த பித்தர் போலப் பேதுறுமால்.

இதில், நிலைதளர்தல், புல்லல், நகைத்தல் முதலியன

(2) பலகாரணங்கள் கூடுதலால் ஒருகாரியம் பிறத்தல்.

"குலமும் உருவுங் குணமுந் திருவும்

நலமுமுயர் கல்வி நயமும் - வலமும்

செருக்கைவிளைக்கின்றனவிச் செம்மற்கு நாளும் திருக்கறுநன் மாண்பிற் செறிந்து.

99