உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடாமைஅணி

அணி

467

ஒரு செயல்

தோன்றுதலை அருமையுடை யதாகச்

சொல்லுவது கூடாமையென்னும் அணியாகும்.

எடு :-

66

“அடுக்கலையோர் கையினா லாயச் சிறுவன் எடுக்குமென யாரறிவா ரீங்கு.

கூடாவியற்கை

இதுவும் வேற்றுப் பொருள் வைப்பணியின் வகைகளுள் ஒன்று. கூடாததனைக் கூடுவதாக்கிப் பாடுவதாம்.

எடு :-

66

'ஆர வடமு மதிசீத சந்தனமும்

ஈர நிலவு மெரிவிரியும் - பாரில்

துதிவகையான் மேம்பட்ட துப்புரவுந் தத்தம் விதிவகையான் வேறு படும்.

இதனுள், குளிர்ச்சியாகிய முத்துமாலை முதலியவற்றில் அழலின் தன்மையாகிய கூடாததனைக் கூடுவதாக நியமங் காட்டி நாட்டினமையை யுணர்க.

கூடுமியற்கை

இதுவும் வேற்றுப் பொருள் வைப்பணியின் வகைகளுள் ஒன்று. கூடுவதனைக் கூடுவதாகக் கூறுவது கூடுமியற்கை என்னும் அணியாகும்.

எடு :-

“பொய்யுரையா நண்பர் புனைதேர் நெறிநோக்கிக்

கைவளைசோர்ந் தாவி கரைந்துகுவர் - மெய்வெதும்பப் பூத்தகையுஞ் செங்காந்தள் பொங்கொலிநீர் ஞாலத்துத்

தீத்தகையார்க் கீதே செயல்.’

99

தீத்தகையார் - தீக்குணமுடையார்! தீப்போலும் நிறத்தினை

உடைய காந்தட் பூக்கள்.