உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468

கையறல் விலக்கு

4 இளங்குமரனார் தமிழ்வளம்

தத்தமக்கு வேண்டிய பொருண்மேல் முயலும் முயற்சி யின்மை தோன்றக் கூறுவது கையறல் விலக்கு என்னும் அணியாம். கையறலாவது செய்யாதொழிந்த செயல்களுக்கு வருந்துதல்.

எடு :-

“வாய்த்த பொருள்விளைத்த தொன்றில்லை மாதவமே

ஆர்த்த வறிவில்லை யம்பலத்துக் - கூத்துடையான் சீலஞ் சிறிதேயுஞ் சிந்தியேன் சென்றொழிந்தேன் காலம் வறிதே கழித்து.

கைதவவொளிப்பணி

கைதவம் முதலிய சொற்களைக் கூறி உவமேயத்தை மறைத் தல் கைதவவொளிப்பணியாம்.

எடு :

“நீரொன்றுசொ லோய்கானிடை நீள்நண்பகல் வெயிலால் வாரொன்றிய சூடுண்டவண் வதிதாருகள் கிளையின் சாரொன்றெரி சிகையென்றகை தவமே கொடு நாவைக் காரொன்றிட நீள்செய்திர வுறுமேயிது காணாய்.

சங்கரவணி

பாலினிடத்துக் கலந்த நீர்போல வோரணி வெளிப்படை யாய்த் தோன்றிப் பிறிதோரணி குறிப்பினாற் கொள்ளுமாறு இரண்டணியாய் நிற்பன சங்கரமென்னும் அணியாம். இதனைக் கலவையணி யென்பார் அணியிலக்கமுடையார்.

எடு :-

“நறையார் வகுளப் பிரான்குரு கூரனன்னீர்ப் பொருநைத்

துறையான் வழுதி நன்னாட் டெங்கண்மாதுன்னைத் தோய்ந்தமுதுக் குறையாலரும்பம்பலாயது நாளுங்குறை நயந்துன்

மறையால் வரவரவேயலரானது மன்னவனே.’

இதில், வறிதே அம்ப லென்னாது அரும்பென்னுங் கிரியை யால் அம்பலாகிய அரும் பென்னும் மாட்டேறில்லாத வுருவகந் தோன்ற, அலராயிற்றெனவே மலர்ந்த போதாயிற்றென வுஞ்