உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

471

எடு :-

66

'கடிதுமலர்ப் பாணங் கடிததனிற் றென்றல்

கொடிதுமதி வேயுங் கொடிதாற் - படிதழைக்கத் தோற்றியபா மாறன் றுடரியின்மா னின்னுயிரைப் போற்றுவதார் மன்னா புகல்.”

இதனுள், துன்பஞ் செய்வதை யொன்றாயே கூறாது பல வாகவே திரட்டிக் கூறியவாறு காண்க.

சமுச்சியவணி : (ஆ)

இன்பமுந் துன்பமும் இருவயிற் பிறந்ததாகக் கூறுவனவும் சமுச்சியவணியாம்.

எடு :

“காரி தருமாறன் காசினிமீ தேயுதிப்ப

வாரியர்மெய் பூரித் தகமகிழ்ந்து - பேரின்ப முள்ளத் துடிக்கு முறுவலத்தோள் வாதியர்மெய் துள்ளத் துடித்ததிடத் தோள்.'

ஞாபகவேது :

கருத்தா, கருவி, பொருள், செயல், காலம், இடம் ஆகிய காரணமின்றிப் பிறகாரணத்தினால் உய்த்துணரத் தோன்றுவது ஞாபகவேது என்னும் அணியாம்.

எடு :

66

காதலன்மே லூடல் கரையிறத்தல் காட்டுமால்

மாதர் நுதல்வியர்ப்ப வாய்துடிப்ப - மீது

மருங்குவளை வின்முரிய வாளிடுக நீண்ட கருங்குவளை சேந்த கருத்து.

சாதிக் குறைவிசேடம்

وو

இது விசேடவணிவகைகளுள் ஒன்று. சாதியில் குறைவு பாடுகாட்டிக் காரியத்தில் உயர்வு தோன்றச் சொல்லுதலாம்.

எடு :

"மேய நிரைபுரந்து வெண்ணெய் தொடுவுண்ட

ஆயனார் மாறேற் றமர்புரிந்தார் - தூய