உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472

இளங்குமரனார் தமிழ்வளம் 4

பெருந்தருவும் பின்னுங் கொடுத்துடைந்தார் விண்மேற் புரந்தரனும் வானோரும் போல்.

இதில், 'ஆயனார்' என்று கூறி உயர்ந்த தேவர்களை வெல்லுதலாகிய காரியத்தில் உயர்வு விளங்கக் கூறினமையால் சாதிக்குறைவிசேடம் அமைதல் காண்க.

சாதித்தன்மையணி

தன்மையணி

கைகளுள் ஒன்று. சாதியிலுள்ள

பல

விதமான தன்மைகளை உள்ளவாறே அழகுபடுத்திப் பாடுவது. சாதியாவது ஒரு நிகரனவாகிய L பலபொருள்களுக்குப் பொதுவாக நிற்பதோர் தன்மையாம்.

எடு :

66

“பத்தித் தகட்ட கறைமிடற்ற பைவிரியும்

துத்திக் கவைநாத் துளையெயிற்ற - மெய்த்தவத்தோர் ஆகத்தா னம்பலத்தா னாரா வமுதணங்கின்

பாகத்தான் சூடும் பணி.’

இது பாம்புச் சாதியின் தன்மையைக் கூறியதனால், சாதித் தன்மையாயிற்று.

சித்திரவணி

காதால் அறிந்தவற்றைக் கண்ணாற்கண்டாற்போலப் பிறர் தெளிவாக உணர எடுத்த பொருளை விரித்துக் காட்டல் சித்திர வணியாகும்.

எடு :-

“அவிர்பூ ணொலியா மலடக் கினளாய்க் கவர்வான் வரல்கண் டுமகன் றிலதாற் றுவர்வாய் மயிறொட் டிடலா குமென நவைதீ ரனமெல் லநடந் ததுவே.”

சிலேடையணி

ஒரு வகையா நின்ற தொடர் சொல் பலபொருள்களது தன்மையைத் தெரிவிப்பது சிலேடை என்னும் அணியாம். அது செம்மொழிச் சிலேடை, பிரிமொழிச் சிலேடை என இரண்டு வகைப்படும்.