உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எடு :-

அணி

473

மடையன் சமையல் செய்பவன், முட்டாள்.

சிலேடையின் முடித்தல்

இது வேற்றுப் பொருள் வைப்பணியின் வகைகளுள் ஒன்று. முன்னர் வைத்த பொருளையும், பின்னர் வைத்த பொருளையும் இணைக்கும் ஒரு சொற்றொடரால் சொல்லுவது சிலேடையின் முடித்தல் என்னும் அணியாகும்.

எடு :-

66

'எற்றே கொடிமுல்லை தன்னை வளர்த்தெடுத்த முற்றிழையாள் வாட முறுவலிக்கும் - முற்று முடியாப் பரவை முழங்குலகத் தென்றும் கொடியார்க்கு முண்டோ குணம்.'

இதில் கொடியார் என்றது முல்லைக் கொடிகளையும் கொடியவர்களையும் உணர்த்தியது. இதனுள் கொடுமையுடை யார்க்கும் கொடிக்குஞ் சிலேடை வந்தவாறு காண்க.

சிலேடையுருவகம்

ஒரு பொருளையொரு செய்யுளகத்து இருபொருள் பயப்பதாகப் பலவிடத்தினும் புணர்த்தி இறுதியில் இருபொருள் பயப்பதாக வுருவகஞ் செய்து பாடுவது சிலேடையுருவகமாகும். எடு :-

“விற்புடைக்கீழ் மன்னி மிகுநாணி டைதழீஇச்

சுற்றுடைமாண் கோதைத் தொடை செறியும் - பொற்புடைத்தாம் பாணிழையா வண்டுலவும் பைந்துளவ மாலுறையூர்

மாணிழையார் சேயரிக்கண் வண்டு.

99

து கண்ணிற்கும் அம்பிற்கும் சிலேடை.

சிறப்பணி

ஒப்புமையாற் பொதுமையுற்றிருந்த இரண்டு பொருள் களுக்கு ஒரு காரணத்தால் சிறப்புத் தோன்றக் கூறுவது சிறப்பணியாகும். இதனை வடநூலார் ‘விசேடாலங்கார’

மென்பர்.