உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480

இளங்குமரனார் தமிழ்வளம்

4

தற்பவ வணி

யாதொரு

காரணத்தினால்

யாதொன்று இரக்கப்

பட்டதோ அது மீண்டும் அப்பொருட்காகப் பிறந்த தென்பது தற்பவம் என்னும் அணியாம்.

எடு :-

“போர்பட்ட வேற்கண் பொருநோக் கினுக்கிலக்காய் நேர்பட் டிறந்த நிறைமன்னோ - கூர்பட்ட நேமியான் முட்டத்து நேரிழைதன் னாணோக்கிற் காமியா வந்ததுவே காண்.

தன்குண மிகையணி

ஒரு பொருளின் சேர்க்கையால் மற்றொரு பொருளின் இயற்கைக் குணம் மிகுதலாம். இதனை வடநூலார் 'அறு குணாலங்கார' மென்பர்.

எடு :-

“வார்செவிசேர் காவிமலர் மானனையாய் நின்கடைக்கண்

பார்வையினான் மிக்ககரும் பண்பு.

தன்மேம் பாட்டுரையணி

99

ஒருவன் தன்னைத்தானே புகழ்வது தன்மேம் பாட்டுரை என்னும் அணியாம்.

எடு :-

66

‘எஞ்சினா ரில்லை யெனக்கெதிரா வின்னுயிர்கொண்

டஞ்சினா ரஞ்சாது போயல்க - வெஞ்சமத்துப்

பேரா தவராகத் தன்றிப் பிறர்முதுகிற்

சாராவென் கையிற் சரம்.

وو

எனக்கெதிரே நின்று போர் செய்து பிழைத்தாரில்லை, என்பது இதன் பொருள். இதனால் தற்புகழ்ச்சி வெளிப்படல் காண்க, இத்தற்புகழ்ச்சி புறப்பொருளிலக்கணத்தில், நெடுமொழி கூறல் என்றும், நெடுமொழி வஞ்சி யென்றும் கூறப்படும்.

தன்மையணி

எவ்வகைப் பட்ட பொருளாக இருந்தாலும் அப்பொருளின் உண்மைத் தன்மையினைக் கேட்போர் மனம் மகிழுமாறு தக்க