உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

481

சொற்களை அமைத்துப் பாடுவது தன்மை என்னும் அணியாம். இதைத்தன்மை நவிற்சி எனினும் அமையும். இது எல்லா அணி கட்கும் பொதுவாம். இவ்வணி, பொருட்டன்மை, குணத்தன்மை, சாதித்தன்மை, தொழிற்றன்மை என நான்கு வகைப்படும்.

திட்டாந்த வணி

யாதாயினும் ஒருபொருட்கு எய்திய நன்மை தீமைக் கூறு பாட்டை புலவனுட் கொண்டதனைத் தன்னாற் கூறப்படும். செய்யுளகத்து முதலில் கூறி, அதன் பின்னர் அதனோடு ஒப்புமை கொள்ளுமாறு தெளிவைத் தரும் மற்றொரு பொருளின் கூறு பாடும் அச்செய்யுளகத்துக் கூறுவது திட்டாந்தம் என்னும் அணியாம்.

எடு :-

“ஆதித் திருமா லடியார் நிரப்பிடும்பை

வாதிக் கினும்வளர்ப்பார் வண்மையே - பாதிப் பிறையாகி யும்மதியம் பேரிருள் சீத்தற்குக் குறையா குறையா குணம்.'

திரிபணி

உவமானப் பொருளானது அப்பொழுது நிகழ்கின்ற செய்கையிற் பயன்படுதற்பொருட்டு உவமேயத்தின் உருவத்தைக் கொண்டு விளங்குதலாம். (பரிணமித்தலாம்) இதனை வடநுலார்

'பரிணாமாலங்காரம்' என்பர்.

எடு ;-

“செய்ய வடிக்கமலத் தாலத் திருந்திழையாள் பைய நடந்து பசும்பொழிலுற் - றுய்ய

அலர்கட் குவளையினா னோக்கியகத் தன்பிற் சிலசொற் றனளே தெரிந்து.

இதில், கமலமுங் குவளையுமாகிய உவமானப் பொருள்கள் நடத்தலும் நோக்கலுமாகிய செய்கையில் உவமேய வடிவத்தைக் கொண்டு திரிந்தன. அடியுருக் கொண்டு திரிந்த கமலமெனவும், கண்ணுருக் கொண்டு திரிந்த குவளை யெனவும் விரித்துரைத்துக் கொள்க.