உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482

திரிபணி

இளங்குமரனார் தமிழ்வளம்

4

செய்யுளடிகளின் ஓரடியில் வந்த எழுத்துக்களின் முதல் எழுத்துத் தவிர மற்ற வெழுத்துக்கள் பலவடிகளிலும் பொருள் வேறுபாட்டோடு தொடர்ந்து வருமாயின் திரிபணி ஆகும்.

எடு :-

“சோதிமதி வந்துதவழ் சோலைமலை யோடிரண்டாய் மேதினியாள் கொங்கைநிகர் வேங்கடமே - போதில் இருபாற் கடலா னிபமூர்ந்தார்க் கெட்டாத்

திருப்பாற் கடலான் சிலம்பு.”

இதில் மூன்றாம் அடியில் உள்ள ள இருபாற் கடலான் என்பதும், நான்காம் அடியில் உள்ள திருப்பாற் கடலான் என்பதும் சேர்ந்து திரிபணியாகும். இவற்றில் இ, தி என்ற முதலிரண்டு எழுத்துக்கள் தவிர மற்றெழுத்துக்கள் ஒன்றாயிருக் கின்றன. ஆனால் இவற்றையும் பிரித்தால் முன்னது. இருப்பாற்கு + ஆடல் + ஆன் + என்றும் பின்னது என்றும் பிரிந்து பொருள் வேறுபடுகின்றன.

தீவகவணி

66

திரு+பால்+கடலான்

ஓரிடத்து வைக்கப்பட்ட விளக்கானது பலவிடங்களிற் சென்று பொருள்களை விளக்குதல் போல, குணத்தானும், தொழிலானும், சாதியானும், பொருளானும் குறித்து ஒருசொல் ஓரிடத்து நின்று செய்யுளிற் பலவிடத்து நின்ற சொற்களோடு பொருந்திப் பொருள்தருவது தீவகம் என்னும் அணியாம். அது முதனிலைத் தீவகம், இடைநிலைத் தீவகம், கடைநிலைத் தீவகம் என மூன்றாம்.

(தீவகம் -விளக்கு)

தீங்குப் பொருட் காட்சியணி

ஒருவன் தன்னிடத்திலிருக்கின்ற செய்கையால் தீமைதரும் செயலைப் பிறருக்குச் செய்தால் தீங்குப் பொருட்காட்சியணி யாகும்.

எடு :-

66

அற்பன் மேன்மை யுற்றுவிளை யாட்டாகக்கீழ் வீழ்வனெனுஞ் சொற்பு கலுகின்றது வாய்விண் டுலங்கு பொருப்பி னதுசிகரத்