உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

திற்ப ரவியுற் றிருந் திடுநீர்த் திவலைக் குழுமென் சிறுகாலாற் பொற்பின் மடந்தாய் பாரசைவு பொருந்திக் கீழ்வீழ்கின்றதுவே.”

துன்பவணி

483

விருப்பப்பட்ட பொருளைக் குறித்து முயற்சி செய்ய அதற்குப் பகைப் பொருள் கிடைத்தலாம். இதனை வடநூலார் 'விசாத நாலங்கார’ மென்பர்.

எடு :-

“சோருஞ் சுடர்விளக்கைத் தூண்டு கையிலவிந்த

தாருமிடர் கூர வகத்து.

துணைசெயல் விலக்கு :

துணை செய்வாரைப் போலக் கூறி விலக்குவது துணை செயல் விலக்கு என்னும் அணியாம்.

எடு :-

"விளைபொருண்மே லண்ணல் விரும்பினையே லீண்டெம் கிளையழுகை கேட்பதற்கு முன்னே - விளைதேன் புடையூறு பூந்தார் புனைகழலாய் போக்கிற்

கிடையூறு வாராம லேகு.

தூரகாரிய வேது

இது ஏதுவணியின் பாற்படும்

ஒருவழிக் காரணம் நிகழப் பிறிதொரு வழிக்காரியம்

நிகழ்வது தூரகாரியவேதுவாகும்.

எடு :-

66

"வேறொரு மாதர்மேல் வேந்த னகநுதியால்

ஊறுதர விம்மா துயிர்வாடும் - வேறே

இருவரே மெய்வடிவி னேந்திழை நல்லார் ஒருவரே தம்மி லுயிர்.

தெரிதரு தேற்றவுவமை :

99

இது உவமைவகைகளுள் ஒன்று. ஐயுற்றதனைத் தெரிந்து துணிந்து கூறுவது தெரிதரு தேற்றவுவமையாம்.