உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484

எடு :-

இளங்குமரனார் தமிழ்வளம்

4

66

'தாமரை நாண்மலருந் தண்மதியால் வீறழியும் காமர் மதியும் கறைவிரவும் - ஆமிதனால் பொன்னை மயக்கும் புனைசுணங்கினார் முகமே என்னை மயக்கு மிது.

தொகையுவமை

உவமேயம் ஒழிந்த மூன்றனுள், ஒன்றும் பலவுந் தொகுத லாலாகிய ஏழுமாம். அவை உருபுத் தொகை, பொதுத்தன்மைத் தொகை பொதுத்தன்மையுருபுத் தொகை. உவமானத்தொகை உருபுவுவமானத்தொகை, பொதுத்தன்மையுவமானத் தொகை, பொதுத்தன்மை யுருபுவமானத்தொகை எனப் பெயர் பெறும். எடு :-

66

'புயற்கருங் குழலாள் காந்தட் போதினை நிகர்க்கும் கையாள்

கயற்கணாள் முகத்திற் கொப்பாங் காந்திகொள் பொருளுண்டோவாய் நயச்சிவப்புளதொன் றில்லை நாசிபோல் வதுமற்றாகும்

குயிற்கிள வியினாள் பாவை குணத்தையார் குறிக்கவல்லார்."

இதில் அவ்வேழும் முறையே காண்க.

தொகையுருவக அணி

இது உருவக அணி வகைகளுள் ஒன்று ஆகிய ஆக என்னும் மாட்டேற்றுச் சொல்லைத் தொகுத்துக் கூறுவதாம். எடு :-

66

'அங்கை மலரு மடித்தளிருங் கண்வண்டும்

கொங்கை முகிழுங் குழற்காரும் தாங்கியதோர்

மாதர்க் கொடியுளதொ னண்பா! வதற்கெழுந்த காதற்குளதோ கரை.

தொடர்புயர்வு நவிற்சியணி : (அ)

இதுவும் உயர்வு நவிற்சியணி வகைகளுள் ஒன்று தொடர்பு இல்லாதிருப்பத் தொடர்பைக் கற்பித்தலாம்.

எடு :-

66

அகழு மிஞ்சியு மண்டத்தி னடிமுடி காறும்

புகுது மென்றுதம் மாற்றலான் முரணுபு புகுங்கால்