உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496

இளங்குமரனார் தமிழ்வளம்

4

பரியாயவணி : (ஆ)

தான் கருதியதனைக் கூறாது அப்பொருள் தோன்றப் பிறி தொன்றினைக் கூறுவது பரியாயம் என்னும் அணியாகும். பரியாயம் - திறமாக அறிவிக்குஞ் சொல்.

எடு :-

“மின்னிகரா மாதே! விரைசாந் துடன்புணர்ந்து

நின்னிகரா மாதவிக்க ணின்றருணீ - தன்னிகராம் செந்தீ வரமலருஞ் செங்காந்தட் போதுடனே இந்தீ வரங்கொணர்வல் யான்.'

இது, குறியிடத்து உய்த்து நீங்குவாள் கூறியது; அஃதாவது, தலைவனுக்குக் குறிப்பிட்டவிடத்தில் தலைவியைக் கொண்டு வந்து நிறுத்திச் செல்லுந்தோழி, அப்போது தான் அங்கு நிற்பது அவர்களின்பத்துக்குத் தடையாகுமென்று அவ்விடத்தை விட்டு நீங்கிச் செல்லக் கருதி ஒரு காரணமாகச் சொன்னது. இதில்,

தான் கருதியதனைக் கூறாது அப்பொருள் தோன்றப்

பிறிதொன்றனைக் கூறியதாகிய பரியாய அணி. அமைந்திருத்தல்

காண்க.

பலவினைச் சிலேடை

தொடர்ந்து நின்ற சொற்கள் வெவ்வேறு வகையாகப் பிரிக்கப்பட்டுப் பலபொருள்தந்து பலவினையால் முடிவது பலவினைச் சிலேடையாகும்.

எடு :-

“தவிரா மதுவுண் களிதளிர்ப்ப நீண்டு

செவிமருவிச் செந்நீர்மை தாங்கிக் - குயிலிசையும்

மின்னுயிரா நுண்ணிடையார் மென்னோக்கு மேவலார் இன்னுயிரை யீர்க்கின் றன.

இது குயிற்குரலுக்கும், மடவார் கண்ணுக்குஞ் சிலேடை. குயிற்குரல்மேற் செல்லுங்கால்

மது - தேன். செவி மருவி - செவியுட்புக்கு. செந்நீர்மை கோடாத தன்மை. மேவலார் - பிரிந்தார். இன் - சாரியை.

-