உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

495

எடு :-

“மலர்வாவி போல்வரான் மாதர் கமல மலர்போலு மாதர் வதனம் - மலர்சூழ் அளிக்குலங்கள் போலு மளக மதனுட் களிக்குங் கயல்போலுங் கண்.”

பரவசவிலக்கு

தன்வயமல்லாமை தோன்றக் கூறி விலக்குவது பரவச

விலக்கு என்னும் அணியாம்.

எடு :-

“செல்கை திருவுளமேல் யானறியேன் றேங்கமழ்தார் மல்ல கலந்தங்கு மதர்விழியின் - மெல்லிமைகள் நோக்குவிலக்குமே னோவா ளிவள்காதல் போக்கி யகல்வாய் பொருட்டு.

பரிவருத்தனை யணி

பொருள்கள் ஒன்றற்கு ஒன்று கொடுத்து ஒன்று கொண்டன வாகச் சொல்லுவது பரிவருத்தனை என்னும் அணியாம். எடு :-

66

'காமனை வென்றோன் சடைமதியுங் கங்கையும்

தாம நிழலொன்று தாங்கொடுத்து - நாமப்

பருவா ளரவின் பணமணிக டோறும்

உருவா யிரம்பெற் றுள.

பரியாயவணி : (அ)

وو

யாதாயினும் ஒரு பொருள் பழமைத்தாகித் தொடர்புறப் பலவாயினும். பலமுறையே பலபிறப்புப் பயின்ற தென்று கூறுவதும் பரியாயம் என்னும் அணியாகும்.

எடு :-

66

“அன்று மலரில மிர்திற் கொழுமுனையிற்

றுன்று துழாய்க்காட்டிற் றோன்றியே - யின்று

நினையிற் றமிழ்மாற னீள்குன்ற வாணர்

மனையிற் பிறந்தனள்பூ மாது.