உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

501

பிறவணியலங்காரம்

ஒருவர்க்குப் பொன்னினாலாதல் மணியினாலாதல் பொற் கொல்லராற் செய்யப்பட்டு அழகு கொடுக்கும் அணிகளையும் இகழ்ந்திடுந்தன்மைத்தாக அவர்க்கு அழகு கொடுப்பதான பிற வணிகள் புலவராற் கூறப்படுவது பிறவணியென்னும் அணியாம். எடு :-

“கைக்கணியொன் றீகை கருத்திற் கணிஞான

மெய்ச்செவிகட் கேற்றவணி மேதகுநூ - லுய்த்தறிதல் சென்னிக் கணிமாறன் சேவடிமேற் கொண்டிறைஞ்சல் என்னுக் கணிவே றினி.”

பிறிதாராய்ச்சியணி

இவ்வணி அறுவகைப்படும்.

(1) உலகறி காரணமில்லாதிருப்பக் காரியம் பிறத்தலைச் சொல்லுதல்.

எடு :-

66

'கடையாமே கூர்த்த கருநெடுங்கண் தேடிப்

படையாமே யேய்ந்தனம் பாவாய் - நடை ஞெமியக்

கோட்டாமே கோடும் புருவங் குலிகச்சே

றாட்டாமே சேந்த அடி.

99

இதில், கடைதல் முதலிய விளங்கிய

காரணமில்லாமல்

கூர்மையாதல் முதலிய காரியஞ் சொல்லப்பட்டன. இவற்றிற்கு இயல் பென்னும் பிறிதோர் காரணம் ஆராய்ந்து கொள்ளப் பட்டது.

(2) காரணத்தினது தருமமாவது சம்பந்தமாவது குறைவாக இருப்பக் காரியம் பிறத்தலைச் சொல்லுதல்.

எடு :-

"திண்மையுங் கூர்மையுமில்லாக் கணைகளைச் சிந்துபுவன் கண்மையின் மூவுலகங்களும் வென்றவக் காமனிகல் உண்மையுணர்ந்து மொருநீ மறந்திடி னொண்டொடிதன் பெண்மையென் பாடுபடும்புக லாயெம் பெருந்தகையே.