உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500

இளங்குமரனார் தமிழ்வளம்

4

எனவும் வரும். இவைகளில், தீரத்திலும் படைப்பிலும் ருக்கின்ற ஒற்றுமையில் வேற்றுமை கூறப்பட்டது.

பிரிநிலைநவிற்சியணி

பெயர்ச் சொற்களுக்கு உறுப்பாற்றலான் மற்றொரு பொருளைத் தந்துரைத்தலாம்.

‘நிருக்தியலங்கார’ மென்பர்.

எடு :-

“நலரையில ராக்குபழி நண்ணுதலால் வேத அலரவனென் றுன்னையறை வார்'

பிரிமொழிச் சிலேடை

இதனை வடநூலார்

தொடர்ந்து நின்ற சொற்கள் வெவ்வேறு வகையாகப் பிரிக் கப்பட்டுப் பலபொருள் கொடுத்து நிற்பது பிரிமொழிச்சிலேடை . யாகும்.

எடு :-

"தள்ளா விடத்தேர் தடந்தா மரையடைய

99

இதில், தள்ளா + இடத்து + ஓர், எனப் பிரிந்து நின்று அழகு கெடாத நிலங்களிலுண்டாய உழும் எருது எனவும்,

தள்ளா + விடத்தேர் எனப்பிரிந்து நின்று அசையாத விடத்தேர் எனவும் வெவ்வேறு பொருள்வந்தவாறு அறிக. பிறப்புப் பிரமாணவணி

நேரக்கூடியதைச் சொல்லுவது பிறப்புப் பிரமாணவணி

யாகும்.

எடு :-

“பரனே பதகற் கிதுவரையுண்

டாகாத்துயர மினி யென்னோ வரநேர் ந்திடுவ தத்தனையும்

பொறுத்தேன் மாறாத் துயரெனுட

னுரமா யுதித்த தானாலு

முன்பாற் சரணமடைந்தவற்குத்

திரமா மிழிவு வந்து பொருந்

திடுத னினக்குப் பெருமையன்றே