உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

499

எடு:-

"பொறையிற் சிறந்த கவச மில்லை."

பிரதீபவணி

உலகத் தியாதாயினும் ஒளிமயமாம் ஒரு முக்கியப் பொருட்கு ஒப்புடையனவாம் பொருளால் அடையுங் காரியத்தை அம் முக்கியப் பொருளான் மிகவும் எய்தப் பெற்றதாயதனை மதித்து நல்லதெனவுரைப்பது பிரதீபம் என்னும் அணியாம்.

எடு :-

“வேலா வலயம் விளக்கிய காரிருளைத் தோலா துடற்றுஞ் சுடர்மயமாங் - கோலா கலத்தமிழ்வே தச்செங் கதிருதிப்ப வும்பர் தலக்கதிரென் வேண்டுமினித் தான்.

பிரத்திய நீகவணி

யாதாயினும் ஓர் உவமேயப் பொருட்கு ஒரு திறத்தால் தோற்ற வுவமைப் பொருளத்திறத்தால் அதற்கு ஒத்ததோர் உவமப் பொருண்மேல் அமர்விளைப்பதாகக் கூறுதல் பிரத்திய நீகம் என்னும் அணியாம்.

எடு :-

“தேமலர்வா விப்புதுவைச் செல்விமுகப் பொற்பினுக்குத் தூமதியந் தோற்றதற்பின் றோலாத - காமருசீ

ரந்தா மரைமே லமர்விளைக்கும் கங்குலின்கண் வந்தாடல் பெற்ற மதி.”

பிரிநிலை உயர்வு நவிற்சியணி

இதுவும் உயர்வு நவிற்சியணி வகைகளுள் ஒன்று. உலகத்தில் புகழ் பெற்று விளங்குவதாகிய தீரம், உருவம், செல்வம் முதலியவை கட்கு இனமாகிய தீராதிகளைப் பிரித்துச் சொல்லுதலாம். எடு :-

"பாந்தண் முடியிற் பரிக்குங் குவலயத்தில்

வேந்தனது தீரமொன்றும் வேறு

எனவும்

“போதார் மலர்க்கூந்தற் பூவை யிவள்படைப்புச்

சாதா ரணமான தன்று.