உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

503

எடு :-

66

'இவண்மூக் கணிமுத் திதழொளியாற் பெற்ற

துவண்பதும ராகத் தொளி.

இதில், குணம் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் முதலியன. பிறிதின் குணம் பெறாமையணி

ஒரு பொருளானது தன்னோடு தொடர்புடைய பிறிதொன்றன் குணம் அடையாமையைத் தெரிவிப்பது பிறிதின் குணம் பெறாமை யென்னும் அணியாம். இதனைவடநூலார் ‘அதத் குணாலங்கார’ மென்பர்.

எடு :-

"புனைகழற்கா னங்கோன் புகழ்திசைவே ழங்கள் நனைமதத்திற் றோய்ந்து நயவார் – மனைவியர்வாட் கண்மை யறத்துடைத்துங் காமர் மதிபோல

வெண்மையுடைத் தாய்விளங்கு மே.'

பிறிதுரையணி

وو

ஒருவரை முன்னிலையாக்கிப் பேசுங்காலத்து அவர்களை நீக்கி யகன்றவராயினும் நல்லறிவில்லா விலங்கு, பறவை, மலை, மரம் முதலாயினவற்றை முன்னிலையாக்கிப் பேசுவது பிறிதுரை யணி எனப்படும்.

எடு :-

66

என்னெஞ் சொப்ப விருபொழுதும் விருட்பொழிலே புன்னெஞ் சொப்ப வுயிரெல்லா நிழற்றுயருட் டன்னெஞ் சொப்பத் தந்தோம் புந்திதயைப் பெருமா னின்னெஞ் சொப்ப நிறுத்தினையே காடென்றான்.”

பின்வருநிலையணி

-தேம்பாவணி.

ஒரு செய்யுளுள் முன்னர்வந்த சொல்லாவது பொருளாவது பின்னர்ப் பலவிடத்தும் வருமாயின் அது பின்வருநிலையென்னும் அணியாம். அவ்வணி சொற்பின் வருநிலையணி. பொருட் பின்வருநிலையணி, சொற்பொருட் பின்வருநிலையணி உவமைப் பொருட் பின்வருநிலையணி என நான்கு வகைப்படும்.