உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504

இளங்குமரனார் தமிழ்வளம்

4

புகழாப் புகழ்ச்சியணி

பழித்தல் போலும் தன்மையால் ஒன்றற்கு மேம்பாடு தோன்ற உரைப்பது புகழாப் புகழ்ச்சி என்னும் அணியாம். இதனை அணியிலக்கணமுடையார் வஞ்சப்புகழ்ச்சியணி என்பார்.

எடு :-

“போர்வேலின் வென்றதூஉம் பல்புகழாற் போர்த்ததூஉம் தார்மேவு திண்புயத்தாற் றாங்குவதூஉம் - நீர்நாடன்

தேரடிக்கூர் வெம்படையாற் காப்பதூஉஞ் செங்கண்மால் ஓரடிக்கீழ் வைத்த வுலகு.

இதில், 'திருமால் எவ்வித இடருமின்றி ஓரடியின் வைத்த உலகைச் சோழன் பலவிதமாக இடர்பட்டுப் பாதுகாக் கின்றனன்' எனப் பழித்தாற்போலக் கூறியதால், பூமி முழுவதையும் சோழன் சக்கரவர்த்தியாக ஒருங்கே ஆட்சி புரிகின்றனன்” என்ற புகழ்ச்சி தோன்றுதல் மூலம் புகழாப் புகழ்ச்சியணி அமைந்திருத்தல் காண்க.

புகழுவமை

து உவமை வகைகளுள் ஒன்று. உவமையைப் புகழ்ந்து உவமிப்பது புகழுவமையாம்.

எடு :-

"இறையோன் சடைமுடிமே லெந்நாளுந் தங்கும்

பிறையேர் திருநுதலும் பெற்ற தறைகடல்சூழ் பூவலயந் தாங்கு மரவின் படம்புரையும்

பாவைநின் னல்குற் பரப்பு.'

புகழ் பொருளுவமையணி

99

இரண்டு வாக்கியங்களுள் முன்னதில் உவமானமாகச் சொல்லப்பட்டதைப் பின்னதில் உவமேயமாக்கியும், உவமேய மாகச் சொல்லப்பட்டதை உவமானமாக்கியுஞ் சொல்லுதல். இதனைத் தண்டியாசிரியர் இதர விதர மென்பர்.

எடு :-

களிக்குங் கயல்போலு நுங்கணுங் கண்போல்

களிக்குங் கயல்போல் கனிவாய்த் - தளிர்க் கொடியீர்