உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

505

தாமரை போன்மலரு நும்முக நும்முகம்போல்

தாமரையுஞ் செவ்வி தரும்.

எனத் தொன்று தொட்டு வரும் உவமான உவமேயங்களை அவ்வாறு சொல்வதும் அது. இதன் கருத்து மூன்றாவது ஒப்பது ஒன்று இன்று என்பதாம்.

-

வர்ணியமென்றும்; புகழ்பொருளென்றும்;

உவமேயம் புனைவுளியென்றும்;

உவமானம்

அவர்ணியமென்றும்,

அல்பொரு ளென்றும், புனைவிலி யென்றுஞ் சொல்லப்படும். புணர்நிலையணி

வினையாலும் பண்பாலும் இரண்டு பொருள்களுக்கு ஒன்றே பொருந்தச் சொல்லுவது புணர்நிலை அணியாகும்.

எடு :-

“பூங்காவிற் புள்ளொடுங்கும் புன்மாலைப் போதுடனே

நீங்காத வெம்மையவாய் நீண்டனவால் - தாங்காதல் வைக்குந் துணைவர் வருமவதி பார்த்தாவி உய்க்குந் தமியா ருயிர்.

புனைவிலி புகழ்ச்சியணி

என்னும்

உவமானத்தை வருணிக்க அதனது தொடர்பால் உவமேயந் தோன்றுதல் புனைவிலி புகழ்ச்சியணியாம். இவ்வணி ஒப்புமைப் புனைவிலி புகழ்ச்சி, பொதுப் புனைவிலி புகழ்ச்சி, சிறப்புப் புனை விலிப் புகழ்ச்சி, காரணப் புனைவிலிப் புகழ்ச்சி, காரியப் புனைவிலிப் புகழ்ச்சி என ஐவகைப்படும்.

புனைவுளி விளைவணி

கூறப்பட்ட உவமேயத்தினால் தொடர்பாகிய மற்றோர் உவமேயம் தோன்றுதலாம். தோன்றுதலாம். இதனை வடநூலார் 'பிரஸ்து தாங்குராலங்கார’ மென்பர்.

எடு :-

'அம்புயநற் போதிருப்ப அஞ்சிறைவண் டேகொடுமுள் பம்புகைதை யாலென் பயன்.'

இதில், குளக்கரையில் தலைவனுடன் விளையாடுந்தலைவி சொல்லிய உவமேயமாகிய வண்டின் செயலினால், அழகுமிக்க