உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

507

இதில், தந்தை விளையாட்டுச் சிந்தையுடைய மைந்தற்கு அறிவு கொளுத்தலாகிய சிறப்புப் பொருள் தோன்றப் பொதுப் பொருள் சொல்லப்பட்டது.

பொதுமையணி :

ஒப்புமையால் இரண்டு பொருள்களுக்கு சிறப்புத் தோன்றக் கூறுதலாம். இதனைவடநூலார் ‘சாமானியாலங்கார' மென்பர்.

எடு :-

வி

“வண்பதும வாவி யடைந்தமட வார்வதனம்

பண்பின் அறியப் படா.

பொய்த்தற் குறிப்பணி :

ஒரு பொருளைப் பொய்யாக்குவதற்கு மற்றொரு பொய்ப் பொருளைக் கற்பித்தல் பொய்த்தற்குறிப் பணியாம். இதனை வடநூலார் ‘மித்தியாத்தியவசிதியலங்கார’ மென்பர்.

எடு :-

“வான்பசுந்தோன் போற்சுருட்ட வல்லோன் பசுபதியைத் தான்பரவா தெய்துறூஉம் வீடு.

"விண்மலர்த்தார் வேய்ந்தோனே வேசையரைத் தன்வசமாப் பண்ணுதற்கு வல்லனென் பார்.

பொருட்குறைவிசேடம் :

99

இது விசேடவணிவகைகளுள் ஒன்று. பொருளில் குறைவு தோன்றக் கூறிக் காரியத்தில் உயர்வு தோன்றச் சொல்லுவது பொருட்குறை விசேடம் என்னும் அணியாம்.

எடு :-

"தொல்லை மறைதேர் துணைவன்பா லாண்டுவரை எல்லை யிருநாழி நெற்கொண்டோர் - மெல்லியலாள் ஓங்குலகில் வாழு முயிரனைத்து மூட்டுமால் ஏங்கொலிநீர்க் காஞ்சி யிடை.'

66

இதில், இருநாழிகொண்டு” என்று பொருட்குறை

காட்டி, ‘அதனைக் கொண்டு உயிரனைத்தும் ஊட்டும்' எனக்