உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508

4 இளங்குமரனார் தமிழ்வளம்

காரியத்தில் உயர்வு தோன்றக் கூறினமையால் பொருட்குறை விசேடம் அமைந்திருத்தல் காண்க.

மெல்லியலாள் - உமைதேவி.

பொருட்காட்சியணி

இது காட்சியணி வகைகளுள் ஒன்று. தன் செய்கையினால் நற்பொருளாயினுந் தீப்பொருளாயினுந் தெரிவிக்கப் பாடுதலாம்.

எடு :-

“ஆதவனற் செல்வந் தனக்குப் பலனடுத்தோர்க்

கீத லெனில்விளக்கா நின்றெழீஇத் - தாதொடுதேன் மல்கு கமல மலர்க்கொருதன் காந்திவளம் நல்குகின்றான் பேருலகில் நன்கு.

இது நற்பொருட்காட்சி.

"வெண்மதிதோன் றத்திமிரம் வேந்தன் பகையழிதல் உண்மையெனல் காட்டிற் றொழிந்து.

இது தீப்பொருட் காட்சி.

பொருட்டன்மையணி

து

இது தன்மை அணிவகைகளுள் ஒன்று. பொருளிடத் துள்ள பலவிதமான இயல்புகளை உள்ளவாறே அழகுபடுத்திப் பாடுவது.

எடு :-

“நீல மணிமிடற்ற னீண்ட சடைமுடியன்

நூலணிந்த மார்ப னுதல்விழியன் - தோலுடையன்

கைம்மான் மறியன் கனன்மழுவன் கச்சாலை

எம்மா னிமையோர்க் கிறை.

وو

ஓருருவின் தன்மையைக்

ஃது பொருட்டன்மையாம்.

பொருட்பின் வருநிலையணி

கூறியதனால்,

பல

ஒரு செய்யுளுள் ஒரே பொருளைக் குறிக்கும சொற்கள் அடுக்கி வருமாயின் அது பொருட்பின் வருநிலை யணியாம்.