உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

509

எடு :-

66

அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா

நெகிழ்ந்தன நேர்முகை முல்லை - மகிழ்ந்திதழ் விண்டன கொன்றை விரிந்த கருவிளை கொண்டன காந்தள் குலை.

இதனுள், அவிழ்தலும், அலர்தலும்,

நெகிழ்தலும்,

விள்ளலும், விரிதலும், மலர்தல் என்னும் ஒருபொருள் மேல் நின்றனவாதலின் அப்பெயர்த்தாயிற்று.

பொருட்பேற்றுப் பிரமாணவணி

ஒரு பொருளிருப்பினான் மற்றொரு பொருளினிருப்புக் கிடைக்குமிடம் தோன்ற வுரைப்பது பொருட்பேற்றுப் பிரமாண வணி எனப்படும்.

எடு :-

66

“கனத்திடுச கனமுடையாய் கமழுனிடை யிருக்குமென மனத்துறுதி படுத்துவது மன்னுசித மேயவிதம் வனத்தொடிலா விடினசில மாபாரத் தினதிருப்பெத் தினத்திலுமெவ் விதமேலாத் திகழ்ந்திருக்கப் பெற்றிடுமே."

பொருண்மொழியணி

ஆன்ம வளமான உண்மைப் பொருள் புலவனாற் செய்யு ளிடத்து உணர்த்தப் படுவது

அணியாம்.

எடு :-

பொருண்மொழி

"இந்த வுடல்பெற்றி ருக்கப் பெறுபொழுதே நந்தி புரவிண்ண கர்மாலைச் - சிந்திப்பா

ரன்றறிவா மென்னா தறஞ்செய்வார் பேரின்பஞ் சென்றறிவார் நெஞ்சே திடன்.”

மடக்கணி

என்னும்

ஒரு தொடர் இடைவிட்டாயினும் இடைவிடாது தொடர்ந் தாயினும் வெவ்வேறு பொருள்படுமாறு திரும்பத் திரும்ப வருதல் மடக்கணியாகும்.