உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

513

எடு :-

'உலகைமகிழ் விக்கும் உயர்மலர்கொண் டேவேள் உலகை வருத்தும் உடன்று.'

وو

(2) ஒருவன் ஒரு காரியத்திற்குச் சாதனமாகக் கொண்ட பொருளை மற்றொருவன் அதற்குப் பகையாகிய காரியத்திற்குச் சாதனமாகக் கொள்ளுதல்.

எடு :-

"கண்ணாற் கொலப்பட்ட காமனையிக் காரிகையார் கண்ணாலுய் விக்கின்றார் காண்.'

(3) ஒரு காரியத்தை உண்டாக்குதற்கு ஒருவரால் உட் கொள்ளப்பட்ட பொருளான் மற்றொருவர் அதன் பகைக் காரி யத்தை நன்றாகச் சமர்த்தித்தல்.

எடு :-

“உலுத்தன் மிடிவருமென் றுள்வெருவி நல்கான் நிலத்தென் றொருவ னிகழ்த்த - நலத்திசைகூர் வள்ளலுமவ் வச்ச மருவியே நல்குமென விள்ளலுற்றான் மற்றொருவன் மெய்.”

மாலைமாற்று

மாலை எந்தப் பக்கந் திருப்பினாலும் அஃது ஒரே தன்மை யாய் இருத்தல் போல ஒரு செய்யுளை எவ்வாறு மாற்றிப் படித் தாலும் ஒரே தன்மைத்தாயிருப்பது மாலைமாற்றாகும்.

எடு :-

66

வாமனாமானமா

பூமனாவானவா

வானவானாமபூ

மானமானாமவா.

وو

இவ்வஞ்சித்துறை இறுதியிலே தொடங்கிப் படிக்கும் போது, முதற்கணின்று படிக்கும்போது முடிந்தது போல

முடிந்தவாற்றையறிக.