உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

515

மாறு படுபுகழ்நிலையணி

புலவன், தான்கருதிய பொருளை மறைத்து அதனைப் பழித்தற்கு வேறொன்றினைப் புகழ்வது மாறுபடு புகழ்நிலை என்னும் அணியாம்.

எடு :

66

இரவறியா யாவரையும் பின்செல்லா நல்ல தருநிழலுந் தண்ணீரும் புல்லும் - ஒருவர் படைத்தனவுங் கொள்ளாவிப் புள்ளிமான் பார்மேற் றுடைத்தனவே யன்றோ துயர்.

இது செல்வந்தர்களை யடைந்து யாசித்து அவர்பின் சென்று குறைவுற்று வருந்தும் இரவலனை இழித்துக் கூறியதாக அமைந்தது. இதில் மானைப் புகழ்தலால் இரவலனது நிந்தை தோன்றி மாறுபடுபுகழ் நிலையணி அமைந்திருத்தல் காண்க. மாற்று நிலையணி

இழிவாகிய பொருள் ஒன்றைக் கொடுத்து அதற்கு மாறாக உயர்வாகிய பொருளை வாங்குதலைச் சொல்லுவது மாற்று நிலையணியாகும்.

எடு :-

66

சடாயு கிழவுடம்பைத் தான்கொடுத்துப் பெற்றான் கெடாததொரு கீர்த்தி யுடம்பு.’

மிகுதி நவிற்சியணி

99

வியப்படையத் தக்கதாகவும் பொய்யாகவும் இருக்கின்ற

கொடை.

நலம்

முதலியவற்றைப்

புகழ்தலாம். இதனை

வடநூலார் ‘அதியுக்தியலங்கார’ மென்பர்.

எடு :-

66

'ஓதுபுகழ்த் தாதாவாய் நீயுறவிப் போதுலகில் ஆதுலர்கள் கற்பகமா னார்.

இது பெருங்கொடை.

“உன்பிரதா பத்தழலின் வற்றுகட லொன்னலர்மான் அன்னவர்கண் ணீரினிறைந் தற்று."

இது நலம்.