உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516

இளங்குமரனார் தமிழ்வளம்

மிகையுயர்வு நவிற்சியணி

4

காரியத்தை முன்னுங் காரணத்தைப் பின்னும் நிகழ்வன வாகக் கூறுதல் மிகையுயர்வு நவிற்சியணியாம்.

எடு

66

‘வணங்கியிறை யின்சொல் வழங்குமுனம் பேதைக் குணங்கூட னீங்கிற் றுளத்து.

இதில், காரண காரியங்களின் முன்பின் நிகழ்தலாகிய முறையில், முறை பிறழ்வு கூறப்பட்டது.

முதனிலைப் பொருட்டீவகம்

செய்யுளில் முதலில் நிற்கும் பொருட்பெயர் அச்செய்யுளில் பலவிடத்தும் நிற்கும் மற்ற சொற்களோடு சேர்ந்து பொருள் விளைவிப்பது முதனிலைப் பொருட்டீவகமாகும்.

எடு :-

"முருகவேள் சூர்மா முதறடிந்தான் வள்ளி

புரிகுழன்மேன் மாலை புனைந்தான் - சரணளித்து மேலாய வானோர் வியன்சேனை தாங்கினான் வேலா னிடைகிழித்தான் வெற்பு.

இதில் முதலில் நின்ற முருகவேள் என்ற பொருட்பெயர் தடிந்தான் என்பது முதலியவற்றோடு சென்றியைந்து பொருள் தந்தமை காண்க.

முதனிலைக் குணத்தீவகம்

செய்யுளில் முதலில் நின்ற பண்புச் சொல் அச்செய்யுளில் பலவிடத்தும் நிற்கும் மற்றச் சொற்களோடு சேர்ந்து பண்புப் பொருளைத் தருவது முதனிலைக் குணத்தீவகமாகும்.

எடு :-

"சேந்தன வேந்தன் றிருநெடுங்கண் டெவ்வேந்தர்

ஏந்து தடந்தோ ளிழிகுருதி – பாய்ந்து

திசையனைத்தும் வீரச் சிலைபொழிந்த வம்பும்

மிசையனைத்தும் புட்குலமும் வீழ்ந்து

99

ச்செய்யுளில் முதலில் உள்ள சேந்தன என்னும் பண்பு, கண், தோள், திசை முதலியவற்றோடுஞ் சென்று சேர்ந்து பொருள் தந்தமையால் இது, முதனிலைக் குணத்தீவகமாயிற்று.