உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

517

முதனிலைத் தொழிற்றீவகம்

செய்யுளில் முதலில் நின்ற தொழிலைக் குறிக்கும் ஒருசொல் அச்செய்யுளில் பலவிடத்தும் நிற்கும் மற்ற சொற்களோடு சேர்ந்து பொருள் விளைவிப்பது முதனிலைத் தொழிற்றீவகமாகும்.

எடு :

“சரியும் புனைசங்குந் தண்டளிர்போன் மேனி வரியுந் தனதடஞ்சூழ் வம்பும் - திருமான

ஆரந் தழுவுந் தடந்தோ ளகளங்கன்

கோரந் தொழுத கொடிக்கு.

وو

சோழன் உலாப்போன காட்சியைக் கண்டு அவ்வளவிலே அவன்பால் தனக்குண்டாய கழிபெருங்காதலை ஆற்றாளாகிய ஒருபெண் உடல் மெலிந்து, கைவளை கழன்றுவிழ, உடம்பின் அழகு குறையக், கச்சுத் தளர்ச்சியுற, நின்றனள் என்பது இதன் கருத்து. இதில் சரியும் என்னும் வினைச் சொல் சங்கு முதலிய வற்றோடு சென்றியைந்து பொருள் தந்தமையால், முதனிலைத் தொழிற்றீவகம் ஆயிற்று.

முதனிலைச் சாதித் தீவகம்

து

செய்யுளின் முதலில் நின்ற சாதியைக் குறிக்குஞ்சொல் அச்செய்யுளில் பலவிடத்தும் நிற்கும் மற்ற சொற்களோடு பொருந்திப் பொருள் விளைவிப்பது முதனிலைச் சாதித்தீவக மாகும்.

எடு :-

"தென்ற லனங்கன் றுணையாஞ் சிலகொம்பர்

மன்றற் றலைமகனாம் வான்பொருண்மேற் - சென்றவர்க்குச் சாற்றிவிடுந் தூதாகும் தங்கும் பெரும்புலவி

மாற்ற வருவிருந்து மாம்.'

இதில், தென்றல் என்றது அங்ஙனம் பலவாகிய காற்றுகள் அனைத்தையும் உணர்த்தி முதலில் நின்று, 'துணையாம்' என்பது முதலியவற்றோடு சென்றியைந்து நின்றமை காண்க. முதலடி முதன் மடக்கு :

செய்யுளின் முதலடியில் ஒரே சொல் மடங்கி வந்து வேறு வேறு பொருள் வரத் தொடுப்பது முதலடி முதன் மடக்கு என்னும் அணியாம்.