உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518

எடு :-

இளங்குமரனார் தமிழ்வளம்

4

66

துறைவா துறைவார் பொரிற்றுணைவர் நீங்க

உறைவார்க்கு முண்டாங்கொல் சேவல் - சிறைவாங்கிப் பேடைக் குருகாரப் ‘புல்லும் பிறங்கிருள் வாய்

வாடைக் குருகா மனம்.'

முயற்சிவிலக்கு

وو

முயற்சி தோன்றக் கூறி விலக்குவது முயற்சி விலக்கு

என்னும் அணியாம்.

எடு :-

“மல்லணிந்த தோளாய்! இதென்கொலோ வான்பொருண்மேற் செல்க விரைந்தென் றுளந்தெளிந்து - சொல்லுதற்கே என்று முயல்வலியா னேகனீ யென்றிடையே

தோன்றுகின்ற தென்வாயிற் சொல்.'

முரண்மேல் விளைவணி

பகைமை முன்பு விளங்கிப் பின்பு உண்மைப் பொருள் விளங்கத் தொடுப்பது முரண்மேல் விளைவணியாகும்.

முரணித் தோன்றல்

இது வேற்றுப் பொருள் வைப்பணியின் வகைகளுள் ஒன்று. தம்முள் மாறுபட்டிருக்கும் இயல்புடைத் தாய பொருளை வைத்துப் பாடுவதாம்.

எடு :-

"வெய்ய குரற்றோன்றி வெஞ்சினவே றுட்கொளினும் பெய்யு முகிறன்னைப் பேணுவரால் - வையத் திருள்பொழியுங் குற்றம் பலவரினும் யார்க்கும் பொருள்பொழிவார் மேற்றே புகழ்.’

முரண்விளைந்தழிவணி

ஓரிடத்து உள்ளனவுங் காரிய காரணங்கள் ஆகாதனவு மாகிய இரண்டு தருமங்களுக்கு மேன்மேலுந் தோன்றியழியும் பகைமையைச் சொல்லுவது முரண்விளைந்தழிவணியாகும். இதனை வடநூலார் ‘விரோதாபாசாலங்கார’ மென்பர்.