உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எடு :-

66

அணி

519

சந்தமிலா வாயுறினுஞ் சந்தம் உடையனவே கொந்தவிழ்தார்ப் பாவை குயம்.”

இதில், சந்தமில்லனவற்றைச்

மென்னும் பகைமை அழகுடை

அழிந்தது.

சந்தமுடையனவேயா ா

அழகுடையன என்னும் பொருளால்

முரண்வினைச்சிலேடை

தொடர்ந்து நின்ற சொற்கள் வெவ்வேறு வகையாகப் பிரிக்கப்பட்டு பலபொருள் தந்த மாறுபட்ட வினையான் முடிவது முரண் வினைச் சிலேடையாகும். முரண் - மாறுபாடு. எடு :-

66

'மாலை மருவி மதிதிரிய மாமணஞ்செய்

காலைத் துணைமேவ லார்கடிய - வேலைமிசை மிக்கார் கலியடங்கா தார்க்கும் வியன் பொழில்கள் புக்கார் கலியடங்கும் புள்.

இது பிரிந்தார்க்கும் புணர்ந்தார்க்குஞ்சிலேடை. பிரிந்தார்மேற் செல்லுங்கால்

மாலை - மயக்கம். மதி - கருத்து. திரிதல் - வேறுபடுதல். மணம் வாசம். துணை மேவலார் தம் துணைவரைப் பிரிந்தார். கடிய - அஞ்ச.

-

புணர்ந்தார் மேற்செல்லுங்கால்

-

மாலை - அந்திப் பொழுது. மதி - திங்கள். திரிதல் - உலாவல். மணம் - கூட்டம். துணைமேவலார் - துணைவரைப் பிரிந்தார். கடிய - விளங்க.

இங்கு அடங்காது ஆர்க்கும், ஆர்கலி அடங்கும் என வந்த வினைகள் ஒன்றற் கொன்று முரணாகுமாறு காண்க.

முழுவதுஞ் சேறல்

இது வேற்றுப் பொருள் வைப்பணியின் வகைகளுள் ஒன்று. ஒருதிறம் உரைத்தால் அத்திறம் எல்லாவற்றின் மேலும் முற்றச் செல்லவுரைப்பதாம்.