உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

521

முற்றுருவகம்

இது உருவக அணி வகைகளுள் ஒன்று. உறுப்பு, உறுப்பி ஆகியவைகளை ஏற்ற இடத்தோடும், பிறவற்றோடும் முற்ற ருவகஞ் செய்துரைப்பது முற்றுருவமாகும்.

எடு :-

66

“விழியே களிவண்டு மென்னகையே தாது மொழியே முருகுலாந் தேறல் - பொழிகின்ற தேமருவு கோதைத் தெரிவை திருமுகமே தாமரையென் னுள்ளத் தடத்து.

முற்றுவமை

وو

உறுப்பு உறுப்பிகளை யொரு செய்யுளகத்து தொக்க வுவமிப்பது முற்றுவமையாம்.

முன்னவிலக்கணி

ஒரு பொருளைக்

குறிப்பினால் விலக்கின் அது

முன்னவிலக் கென்னும் அணியாம். அவ்வணி இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் மூவகைப்பட்ட காலங்களோடும் கூடிவரும். எடு :-

எடு :-

“பாலன் றனதுருவா யேழுலகுண் டாலிலையின் மேலன்று கண்டுயின்றாய் மெய்யன்பர்-ஆலன்று வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ சோலைசூழ் குன்றெடுத்தாய் சொல்.

உலக முழுவதும் உண்ணப்பட்ட காலத்து ஆலிலை யொன்று தனியாக இருந்ததென்பது பொருந்தாது என அது குறிப்பால் விலக்கப்பட்டது.

மூன்றாமடி முதல் மடக்கு

செய்யுளின் மூன்றாம் அடியின் முதலில் நின்ற ஒரே சொல் மடங்கி வேறு பொருள் வரத் தொடுப்பது மூன்றாமடி முதன் மடக்கு என்னும் அணியாம்.