உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522

எடு :-

இளங்குமரனார் தமிழ்வளம்

4

LDL

"தேங்கானன் முத்தலைக்குந் தில்லைப் பெருந்தகைக்கு ஓங்காரத் துட்பொருளா மொண்சுடர்க்கு - நீங்கா மருளா மருளா தரித்துரைக்கு மாற்றம்

பொருளாம் புனைமாலை யாம்.

இதன் மூன்றாமடியில், “மருளா மருளா” என்ற ஒரு சொல் ங்கி வந்திருத்தலைக் காண்க.

மேன்மேலும் உயர்ச்சியணி

மேன்மேலும் ஒன்றற்கொன்று உயர்குணத்தாலாவது, இழிகுணத்தாலாவது உயர்வாதலைச் சொல்லுவது மேன் மேலுயர்ச்சியணியாகும்.

எடு :-

"தேன்மதுர மாமதனில் தெள்ளமுத மேமதுரம் மான்சொலதி னும்மதுர மாம்.’

இஃது உயர்வு.

“நீரினு நுண்ணிது நெய்யென்பர் நெய்யினும் யாரு மறிவர்புகை நுட்பம் - தேரின் நிரப்பிடும் பையாளன் புகுமே புகையும் புகற்கரிய பூழை நுழைந்து.’

இஃது இழிவு.

மோகவுவமை

து உவமை வகைகளுள் ஒன்று. ஒரு பொருளின் மேல் எழுந்த வேட்கையால் அதற்கு உவமையாகக் குறிக்கப்பட்டவதன் மேலும் வேட்கை நிகழ்ந்ததாகக் கூறுதல் மோகவுவமையாம். எடு :-

66

அம்பவள மொன்றிருப்ப வன்புறுமா தொண்டையெனச்

செம்பதுமத் தேனேநின் செவ்வாயை - விம்பமுநே

ராதற் கதைவிரும்பு மாழியான் கோழியூர்க்

காதற் சிறப்புடையேன் கண்.'