உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

523

யுக்தி அணி

தனது உள்ளக் கருத்தைப் பிறரறியாதவாறு யுக்தியால் மறைப்பது யுக்தியணியாகும்.

எடு :-

“மாணிழையா ளன்பன் வடிவைப் படத்தெழுதும்

பாணிலங் கோர்சிலர்தன் பாங்குற - நாணிமுகம்

கோட்டினாள் சித்தரித்த கோலவுரு வின்கரத்தில் தீட்டினாள்கன் னத்தின் சிலை.'

யுத்தவேது

இதுவும் ஏதுவணியின் பாற்படும்.

காரணத்திற்குப் பொருத்தமான காரியம் நிகழ்வது யுத்த

வேதுவாகும்.

எடு :-

யுத்தம் - பொருத்தம்.

“பொன்னி வளநாடன் கைவேல் பொழிநிலவால்

முன்ன ரசைந்து முகுளிக்கும் - தன்னேர்

பொரவந்த வேந்தர் புனைகடகச் செங்கை

அரவிந்த நூறா யிரம்.”

இங்கே, கையாகிய தாமரையின் குவிவு காரியம் எனவும், வேற்படையின் ஒளியாகிய நிலாக் கதிர் ஒளியாகிய நிலாக் கதிர் அக்குவிவுக்குப் பொருத்தமான காரணம் எனவும் அறிக.

வக்கிரவுத்தி

வெளிப்படையாக விளிக்குமிடத்தும் வினாவுமிடத்தும் முன்னின்ற பொருண்மையை மறைத்துப் பிறிதொன்றாக வெதிர் மொழி கொடுத்தவிடத்து மீண்டுந் தெளிவிப்பனவாய் நிரைத்த தொடர் மொழி தோறும் அம்முன்னின்றவர் இரட்டுகிற இசை திரிநிலைத்தாயுரைப்பது வக்கிரவுத்தியாகும்.

எடு :-

66

'அஞ்சக்கரனோ வென்றேன்சங்கரனா மென்றான்றனியாழி

மிஞ்சத்தரித்ததிருத்தேர் வெய்யவனோ வென்றேன் வெயிலென்றான்