உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

525

வல்லோர் நவிற்சியணி

அஃதாவது, அவ்வுலக வழக்குச் சொல்லே மற்றொரு பொருளை உட்கொண்டிருத்தலாம். இதனை வடநூலார் 'சேகோக்தியலங்கார’ மென்பர்.

எடு :-

“பறிமலர்ப்பூங் குஞ்சியாய் பாம்பேபாம் பின்கால் அறியுமுல கத்தென் றறி.”

ஃது, ஒருவன் மற்றொருவன் செய்தியைத் தன்னைக் கேட்க, அவன் அருகில் இருக்கின்றவனைக் காட்டி இவனுக்கே அது தெரியுமென்று சொல்லுங் கருத்தையுட் கொண்டிருத்தல் காண்க.

வல்லினப் பாட்டு

வல்லின வெழுத்தாறும் வந்து ஒழிந்த இடையினம் மெல்லினம் ஆகிய இரண்டின மெய்களும் வராமல் பாடுவது வல்லினப் பாட்டாகும்.

எடு :-

66

துடித்துத் தடித்துத் துடுப்பெடுத்த கோட

றொடுத்த தொடைகடுக்கை பொற்போற் பொடித்துத்

தொடிபடைத்த தோடுடித்த தோகைகூத் தாடக்

கடிபடைத்துக் காட்டிற்றுக் காடு.

வனப்புநிலையணி

விளக்கிக் கூறவுரிய கருத்துக்கு அடைமொழியாகக் கூற வேண்டிய செய்தியை மறைத்து அதுபோல்வதாகிய பிறிதொரு செய்தியை அடைமொழி ஆக்குதல்.இதனை

‘லலிதாலங்கார' மென்பர்.

எடு :-

6

“பெருகறல்முற் றும்போன பின்கரைகோல் லற்குத் திருவனையாள் வேட்டல் செயும்."

வடநூலார்

இதில், சிறிது அன்போடு வந்த நாயகனை இகழ்ந்து, மற்றொருத்தியிடத்து அவன் போனபின்பு தன்னைத் தூதுவிட விரும்பிய நாயகியைக் குறித்துத் தூதிதான் சொல்ல வேண்டியதற் கொத்த நீர் போயபின் கரை கோலல் கூறினாள்.