உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526

வன்சொல் விலக்கு

இளங்குமரனார் தமிழ்வளம்

4

கடுஞ்சொற்களைக் கூறிக் குறிப்பினால் விலக்குவது வன் சொல் விலக்கணியாம்.

எடு :-

“மெய்யே பொருண்மேற் பிரிதியேல் வேறொரு தையலை நாடத் தகுநினக்கு - நெய்யிலை வேல் வள்ளல் பிரிவற்றம் பார்த்தெங்கள் வாழ்நாளைக் கொள்ள உழலுமாம் கூற்று.

வாக்கியப் பொருட்காட்சியணி

இது காட்சியணி வகைகளுள் ஒன்று. இரண்டு வாக்கியப் பொருள்களுக்கு ஒற்றுமையைக் கூறுவதாம்.

எடு :-

"முறைகெழு வள்ளற்கு முனிவின்மை திங்கட்

கறைகளங்க மில்லாமை யாம்.

இதில், கோவமில்லாமையில் களங்கமில்லாமை கூறப்

பட்டது.

வாழ்த்தணி

இன்ன தன்மையை யுடையார்க்கு இன்னது நிகழ்க என்று புலவர்கள் தாம் கருதிய தனை விதிப்பது வாழ்த்தென்னும் அணி

யாம்.

எடு :-

66

"மூவாத் தமிழ்பயந்த முன்னூன் முனிவாழி ஆவாழி வாழி யருமறையோர் - காவிரிநாட் டண்ண லனபாயன் வாழி யவன்குடைக்கீழ் மண்ணுலகில் வாழி மழை.

வாழ்த்து விலக்கு

வாழ்த்தி வைத்து விலக்குவது வாழ்த்து விலக்கு என்னும்

அணியாம்.

எடு :-

"செல்லு நெறியனைத்துஞ் சேம நெறியாக மல்க நிதியம் வளஞ்சிறக்க - வெல்லும்