உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

அடற்றேர் விடலை யகன்றுறைவ தாங்கோர் இடத்தே பிறக்க வியாம்.

527

இங்கே, ஆக, மல்க, சிறக்க என்று வாழ்த்தி, “விடலை யகன்றுறைவ தாங்கோர் இடத்தே பிறக்க" என்பதனால் மரணம் ஏற்படும் என்பது பெறப்படக் கூறிச் செல்லுதலை விலக்கிய வாறு காண்க.

விகாரவுவமை

இது உவமை வகைகளுள் ஒன்று. ஓர் உவமையை விகாரப் படுத்தியுவமிப்பதாம்.

எடு :-

சீத மதியி னொளியுஞ் செழுங்கமலப்

போதின் புதுமலர்ச்சியுங்கொண்டு - வேதாதன் கைம்மலரா னன்றிக் கருத்தால் வகுத்தமைத்தான் மொய்ம்மலர்ப்பூங் கோதை முகம்.

விசேடவணி

எடுத்துக் கொண்ட பொருட்குக் குணத்தானுந் தொழி லானும் பொருளானும் உறுப்பினானுங் குறைபாடுள்ளதாகக் கூறி அக்குறை காரணமாவதற்கு மேன்மை தோன்றவுரைப்பது விசேடவணியாகும்.

எடு :-

“யானை யிரதம் பரியா ளிவையில்லைத்

தானு மனங்கன் தனுக்கரும்புந் - தேனார்

மலருமம் பாயினு மார னமர்செய்

துலகுகைக் கொண்டா னொருங்கு."

விடையில் வினாவணி

மறுமொழிவேண்டாமையும் முன்னிலை அல்லாரையும்

அறிவில்லாதவற்றையும்

வினவினாற்போல

விடையில் வினாவணி எனப்படும்.

எடு :-

66

வுரைப்பதும்

"கண்பட் டுறங்கவென் னிறையோன் கண்டேனோ கண்டணைத் தேனோ பண்பட் டினிய மழச் சொற்பகர வினிதிற் கேட்டேனோ