உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

535

காவல னென் றோங்கு கடை காப்பவராற் றள்ளுணமிப் பாவலரைப் பொன்னேகண் பார்.’

வீறுகோளணி

செல்வ மிகுதியை யேனும், புகழத்தக்க ஒரு வரலாற்றைப் புகழ் பொருளுக்கு அங்கமாக வேனும் பாடுதலாம். இதனைவட நூலார் ‘உதாத்தாலங்கார’ மென்பர்.

எடு :-

“மணிப்பொற் குழைகொண்டு கோழி யெறிவாழ்க்கை அணிப்பொற் கொடிகாண் அவள்.”

இது செல்வ மிகுதி.

“உமையாள் அருந்தவஞ்செய் ஒண்கச்சி யூரே

எமையாள் பரமற் கிடம்.”

இது புகழ் பொருளுக்கு அங்கம்.

வெகுளிவிலக்கு :

கோவம் தோன்றக் கூறி விலக்குவது வெகுளிவிலக்கு என்னும் அணியாம்.

எடு :-

66

'வண்ணங் கருக வளைசரிய வாய்புலர

எண்ணந் தளர்வே மெதிர்நின்று - கண்ணின்றிப்

போதல் புரிந்து பொருட்காதல் செய்வீரால் யாதும் பயமிலமே யாம்.

ங்கே, தலைவன் பிரிவின் வண்ணங்கருகுதல் முதலிய நிகழ எதிர் நின்று “யாதும் பயமிலமே யாம்” என்றதனால் வெகுளி தோன்றக் கூறிச் செலவை விலக்கியவாறு அறிக.

வெளிப்படை நவிற்சியணி :

அஃதாவது, சிலேடையான் மறைத்த பொருளைப் புலவன் வெளிப்படுத்தலாம். இதனை வடநூலார் 'விவ்ருதோக்திய ப லங்கார' மென்பர்.