உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

536

எடு :-

66

இளங்குமரனார் தமிழ்வளம்

4

பிறன்புலத்தில் வாய்நயச் சொல்பெட்புடன் கொள்காளாய் இறைவனடை கின்றனன் விட்டேகு - துறையி னெனப் பண்பி னுணரப் பகர்ந்தான் குறிப்பாக

நண்பினுயர் பாங்க னயந்து.’

வெற்றொழிப்பணி

இவ்வணி ஒழிப்பணிவகைகளுள் ஒன்று. உவமானத்தின் தன்மையை விளக்குதற் பொருட்டு உவமேயத்தின் தன்மையை ஒழித்தலாம்.

எடு :-

“மதியன் றிதுபுகலின் வானதியிற் றோன்றும்

புதியதொரு வெண்கமலப் பூ.

வேண்டலணி

குற்றத்தாற் குண முண்டாதலைக் கண்டு அக்குற்றத்தை வேண்டுதலாம். இதனை வடநூலார் ‘அநுக்ங்யாலங்கார’ மென்பர்.

எடு :-

"வெண்டிரு நீறு புனையுமா தவர்க்கு

விருந்து செய் துறுபெரு மிடியும்

கொண்டநல் விரதத் திளைக்கும்யாக் கையுநீ

கொடியனேற் கருளுநா ளுளதோ.

வேறுபாட்டொழிப் பணி

| 2

இதுவும் ஒழிப்பணி வகைகளுள் ஒன்று உவமேயத்தில்

மிகுத்தற் பொருட்டு மற்றொரு பொருளின் வினையை ஒழிப்ப

தாம்.

எடு :-

“தெரியு மிதுதிங்க என்று செழும்பூண்

அரிவைமுக மேதிங்க ளாம்.

இதில், திங்களின் வினை அதனிடத்து ஒழிக்கப்பட்டு உவமேயமாகிய முகத்தில் கூறப்பட்டது.