உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேற்றுமை யணி

அணி

537

வெளிப்படையாகக் கூறுங் கூற்றினாலாவது குறிப்பினா லாவது ஒப்புடைய இருபொருளை ஒருபொருளாக வைத்துக் கூறிப் பின்னர் இவற்றைத் தம்முள் தம்முள்

சொல்லுவது வேற்றுமை யணியாகும்.

எடு :-

66

“அங்கண் விசும்பி னகனிலாப் பாரிக்குந் திங்களுஞ் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள்

மறுவாற்றும்; சான்றோர் அஃதாற்றார்; தெருமந்து தேய்வர் ஒருமா சுறின்.

வேற்றுமைப்படச்

இதில், திங்களுக்கும் சான்றோருக்கும் ஒப்புமை கூறிப் பின்னர் இரண்டற்கும் வேற்றுமை கூறியதைக் காண்க. வேற்றுமை யுருவகம்

உவமேயம் உவமானம் ஆகிய இரண்டற்கும் உள்ள ஒப்புமையைக் காட்டிப் பின் அவற்றுள் வேற்றுமை தோன்ற ருவகம் செய்து உரைப்பது வேற்றுமையுருவகமாகும்.

எடு :-

“வையம் புரக்குமான் மன்னவநின் கைக்காரும் பொய்யின்றி வானிற் பொழிகாரும் - கையாம் இருகார்க்கு மில்லைப் பருவ மிடிக்கும்

ஒருகார்ப் பருவமுடைத்து.

இதனுள் குணப் பொருளையும், முக்கியப் பொருளையும் வையம் புரக்கும்’ என் றொப்புமை காட்டிக், ‘கைக் காருக்குப் பருவமில்லை; ஏனைக் கார் பருவமுடைத்து” என வேற்றுமைப் படுத்திக் கூறினமையைக் காண்க.

வேற்றுப் பொருள் வைப்பணி : (அ)

பொதுப் பொருளால் சிறப்புப் பொருளையும் சிறப்புப் பொருளால் பொதுப் பொருளையும் உறுதிப்படுத்திக் கூறுவது வேற்றுப் பொருள் வைப்பு என்னும் அணியாம்.

எடு :-

"புறந்தந் திருளிரியப் பொன்னேமி யுய்த்துச்

சிறந்த வொளிவளர்க்குந் தேரோன் - மறைந்தான்