உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538

இளங்குமரனார் தமிழ்வளம்

4

புறவாழி சூழ்ந்த புவனத்தே தோன்றி

இறவாது வாழ்கின்றார் யார்?

இதில் முன்னிரண்டு அடிகளில் கூறப்பட்ட ‘கதிரவன் மறைவு’ சிறப்புப் பொருள்; பின்னிரண்டு

அடிகளில்

சொல்லப்பட்ட ‘உலகத்தில் தோன்றியவர்கள் இறப்பார்கள்' என்பது பொதுப் பொருள்.

சிறப்புப் பொருளை உறுதிப்படுத்தி முடிப்பதற்குப்

பொதுப் பொருள் கூறப்பட்டிருக்கிறது.

வேற்றுப் பொருள் வைப்பணி : (ஆ)

ஒரு பொருளின் திறத்தைக் கூறத் தொடங்கிப் பின்னர் அது முடித்தற்கு வலிமையுடைய பிறிதொரு பொருளை உலக மக்களால் அறியப்படும் முறையில் வைத்துக் கூறுவது வேற்றுப் பொருள் வைப்பென்னும் அணியாம்.

எடு :-

“நிறைவாரி யைத்தாண்டி நின்றா னனுமன் அறைபெரியோர்க் கென்னோ அரிது.”