உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதிகைத் தென்றல் பொன்மனச் செம்மல் மதியால் மகிழ்வுடன் மணிவிழாக் கண்டவர் வள்ளுவர் குறளை வாழ்வாய்க் கொண்டவர் என்போ லானார் ஏல மானார்

கள்ளம் கபட மில்லாப் புலவர்

உள்ள முயர வுரைபல தந்தவர் தேவ நேயம் தெளித்துத் தந்தவர் மூவர் போல முத்தமிழ் காத்தவர் தமிழ்நலம் காத்திடும் தமிழ்ப்பற் றாளர் அமிழ்த மழைபோ லாக்கினார் நூற்கடல் அன்னைத் தமிழின் அருந்தமிழவடி வவரே!

- ஆ. நெடுஞ்சேரலாதன்

2,சிங்காரவேலர் தெரு தியாகராயர் நகர்

வளவன் பகுப்பகம் சென்னை - 600 017