உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

93

கொள்ளும் தகுதி இல்லாமல், போற்றுவார் போற்றுதலுக்கு மாற்று வழியாகத் தூற்றுதலை மேற்கொண்டவர் செய்கையாம் அது!

திருக்குறளில் குறை குற்றம் சுட்டுவார், முதற்கண் தம் மனச் சான்றுக்கு மதிப்புத் தருபவர் தாமா? தருபவர் எனின் “பூதங்கள் ஐந்தும் அகத்தே" நகுமே!

அவர், திருக்குறளை முறையாகக் கற்றவர் அல்லர்;

அவர், திருக்குறளை முற்றக் கற்றவரும் அல்லர்;

அல்ா, திருக்குறளை மூலப் பொருளொடு கற்றவரும் அல்லர்;

அவர், திருக்குறட் பொருட்சிக்கலைத் தீர்க்கும் தீர்வு, திருக்குறளிலேயே உண்டு என்று கண்டவரும் அல்லர்!

தொல்காப்பியம் சங்க இலக்கியம் ஆகிய தமிழ் நெறிமை களைக் கற்றுணர்ந்தாரும் அல்லர்! தொடுகுறி பார்ப்பதுபோலப் பார்த்தும், வழிப்போக்கர் உரையைக் கேட்பது போலக் கேட்டும் -நுனிப்புல் மேய்வதைத் திருக்குறள் ஆய்வெனப் பூரித்துப் போய்த் தமக்குத் தாமே சொறிந்து மகிழ்பவர்!

ஆயிரம் சான்று காட்டினும் 'என் முடிவே முடிவு' என்று முன்னுறவே முடிவு செய்து கொண்டு விட்டவர்!

இவர்கள் வண்ணமும் எண்ணமும் வெளிப்படை யானவை! தமிழ்ம்மையோ, தமிழ்ம்மைக் குறளோ ஓங்கி உயர்ந்து உலகப் புகழுக்கு உரியதாகிவிடக் கூடாது என்னும் எரிவின் வெளிப்பாடானவை! ஆதலால், இப்பகை, வள்ளுவர் வாய்மொழி வழியில் 'வாள் போல் பகை'யாம்! இப்பகை, அத்துணை அஞ்சக்கத்தக்க பகை அன்றாம்! ஆனால்! அஞ்சத் தக்க பகையாவது 'கேள் போல் பகை' என்பதாம்!

வாள் போல் பகையை நம் விழிப்புணர்வாலும் அறிவுத் திறத்தாலும் கட்டொழுங்காலும் செயலறச் செய்துவிடலாம்! ஆனால், கேள்போல் பகை அத்தகைத் தன்றே!

உள்ளுள்ளாக இருந்தே உருக்குலைப்ப தாயிற்றே அது!

ஆக்கம் செய்வது போன்றே அழிவு செய்வதாயிற்றே! நஞ்சை அமுதெனக் காட்டி நாடியை ஒடுங்கச் செய்வதாயிற்றே.