உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. வாளும் கேளும்

திருக்குறளின் ஒளி திக்கெல்லாம் பரவுகிறது!

திருக்குறள் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் டம் பெறுகிறது!

அலுவலகங்கள், போக்குவரத்து ஊர்திகள், இல்லப் பகுதிகள் ஆகியவற்றிலும், அங்கும் இங்கும் பளிச்சிடுகிறது!

திருக்குறள் எண்கவனகம், பதின்கவனமாய்

-

பதினாறு

கவனமாய் வளர்ந்தோங்குகின்றது! சதாவதானி (நூற்றுக் கவனகர்) முன்னே இருந்ததுமுண்டு.

மூன்று வயதுச் சீரிளமையர் வாய்முதல் தொண்ணூறு முழுதுறக் கொழிக்கின்றன!

ஒலியிழை உலகமும், இசை உலகமும் கூடத் திருக்குறளை இனிப்புற இசைக்கின்றன. திருக்குறள் ஆய்வுநூல்கள் ஆண்டுக்கு ஆண்டு பெருகுகின்றன! எப்படி எப்படியோ எத்தனை எத்தனையோ புதுப்புது உரைகளும் பதிப்புகளும் வெளி வருகின்றன. இவ்வாறு திக்கெல்லாம் பரவும் திருக்குறளின் சீர்மையைத் தாங்கிக் கொள்ள இயலாமல், அவ்வப்போது எரிந்து விழுவாரும், பொரிந்து கக்குவாருமாகச் சிலர் இருப்பதும் இதழ்களால் புலனாகின்றன! வாய்போன போக்கில் சொல்ல, கைபோன போக்கில் எழுத, அவற்றுக்கே காத்திருக்கும் இதழ்கள் பல்லாயிரம் பல இலக்கம் என அச்சிட்டுச் சந்தனத்தைச் சேறாகக் காட்டி மகிழ நிகழ்கின்ற நிகழ்வின் உள்ளீடு, தெள்ளெனப் புரியவே செய்கின்றது!

திருக்குறளின் ஒப்பிலாக் கட்டமைதி, எடுத்துச் சொல்லும் எழில், உலகுக்குப் பொதுவாம் உயர்ம்மை, வாழ்வின் எப்பாலுக்கும் எவர்க்கும் எந்நாளுக்கும் பொருந்தும் தனித்தனித் தகைமை, சார்பு எள்ளத்தனையும் இல்லாச்சால்பு, பகுத் தறிவுக்கும் அறிவியல் பார்வைக்கும் தன்னை முற்றாகத் தந்து மேம்பட நிற்கும் மேன்மை, உலகோர் உள்ளம் கொள்ளை கொள்ளும் மாண்பு என்பனவற்றையெல்லாம் தாங்கிக்