உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

"மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழில்லார் கீழல் லவர்"

என்றும்

91

கூறுவனவற்றை நோக்கவே உலகவர் எல்லாரையும் உள்ளடக்கிய ஒரு பெரும் பார்வையது என்று புலப்படுமே!

அரசு, வணிகம், தொழில், கல்வி என்பவையெல்லாம் விரிய விரியக் கூறும் திருவள்ளுவர் இதற்குரியார் இவர் என எவரையேனும் குறித்துளாரா?

வண்ண வேறுபாட்டை, செல்வ ஏற்றத் தாழ்வை இனப் பாற்படுத்தினாரா?

66

""

முறை செய்து காப்பான் வாணிகம் செய்வார்க்கு வாணிகம்”, “உழுவார் உலகத்தார்க்கு ஆணி”, “கண்ணுடையார் என்பவர் கற்றோர்" இவற்றில் உரிமையுள்ளார், உரிமையில்லார் என அவரே ஆவார்?"ஒப்புரவறிதல்" "ஒத்த தறிவான் உயிர் வாழ்வான்" என்கிறதே! ஈகை "வறியார்க்கு ஒன்று ஆவதே ஈகை”

"அற்றார் அழிபசி தீர்த்தல்” - என்கிறதே!

புகழ் "வசையொழிய வாழ்வாரே வாழ்வார்" என்கிறதே.

திருக்குறள் சொல்லும் எல்லாப் பொருள்களும் உலகவர் எல்லார்க்குமாக இருத்தலைத் தேர்ந்து தெளியும் நாம், திருவள்ளுவ மாலை வெண்பா அடி ஒன்றினைக் கண்டு வியப்புறுகிறோம். அதனைப் பாடிய பாவலர் வெள்ளி வீதியார், அவர் எத்தகு தேர்ச்சி மிக்காராய்த் திருக்குறளின் சீர்மையை, "இதற்குரியர் அல்லாதார்இல்" என்கிறார்.

உலகவர் எல்லார்க்கும் உரிய நூல் என்பதை வள்ளுவர் கூறும் வகையால், கோடு கொடு மரத்தின் மேலும், மலைமேலும் ஏறிக் கூறியவர் இவ்வெள்ளிவீதியார் என்னும் பெருமை எய்துகிறார்.