உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

எந்த ஒரு சமய நூலை எடுத்துக் கொண்டாலும் அச்சமயத் தார் உலகத்தளவில் பெரும் எண்ணிக்கையாக இருப்பினும், அச்சமயத்தவர் அல்லார்க்கு உரிய நூலாகக் கொண்டாடப் படாதே! அப்படிச் சமயப்பார்வை கொண்டு எந்த ஒருவராலும் விலக்கக் கூடிய நூல் அல்லவே திருக்குறள்! அதனால் அல்ல வோ எவ்வெச் சமயத்தாரும் தத்தம் சமயத்தோடு சார்த்திக் கூறும் சால்பு நூலாகத் திருக்குறள் திகழ வாய்க்கின்றதாம்!

தோ சமயச்சார்பு மிக்குடைய கல்லாடர் என்ன

சொல்கிறார்?

"சமயக் கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறிப் பொருளிது என்ற வள்ளுவர்!” என்று பாராட்டுகிறோரே!

சமயத்தால் பிரித்துப் பார்க்க இயலாச் சால்புடைய திருக்குறள், பிறப்பு வேற்றுமையேனும் பார்ப்பதோ? பிறப்பு வேறுபட்டால் உயர்வு தாழ்வு கற்பிப்பதோ? தொழில் வழிப் பிரிப்பால் ஏற்றத் தாழ்வு காண்பதோ? இவையெல்லாம் இல்லாதது என்பதன் ஒட்டு மொத்தச் சான்றாக இலங்குவது.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்’

என்னும் குறள் அல்லவோ?

""

தமிழர்க்கென மொழியின் பெயரால்கூட, நாட்டின் பெயரால் கூடப் பிரித்துக் காணற்கில்லாப் பெருநிலையை அல்லவா பேணுவது பெருமைக் குறள்!

ஆளும் சாதி, அடிமையுற்று வீழும் சாதி எனப் பிரிப்பு

உண்டா?

தொழப்படும் பிரிவார், தொழும் பிரிவார் எனப் பிரிவு உண்டா? கற்றுச் சிறப்புறும் கூட்டம், சற்றும் அறிவிலார் தொழும்புக் கூட்ட மெனும் பிரிப்பு உண்டா? மக்கள், மாந்தர் என்னும் பொதுப்பார்வை, பார்ப்பதை அன்றிப் பிரித்துக் காணாப் பெருமையது அல்லவோ திருக்குறள்.

"உறுப்புஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால்

வெறுத்தக்க, பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு" என்றும்

"மக்களே போல்வர் கயவர் அவரென்ன

ஒப்பாரி யாம்கண்ட தில்" என்றும்