உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

96

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

எவ்வளவு மிகுதியாக அழிவு செய்ய முடியுமோ?-அவ்வளவும் செய்வதே, அறிவியல்" என்னும் செருக்கில் உள்ளன, அறிவியல் ஒங்கிய நாடுகள்! அந்நாடுகள், “உலக அமைதி! அமைதி!” என்று ஓயாமல் கூச்சலும் போடுகின்றன தாங்கள் கண்ட பேரழிவுக் கருவிகளைப் பிற நாடுகள் கண்டுபிடிக்கக் கருதியும் பார்த்தல் கூடாது என்று தடைவிதிப்பதோடு, தலைப்படாமல் இருக்கிறதா என்பதைக் கரவாக ஆய்ந்து கொண்டும் உள்ளன! அவற்றுக்கு என்ன, உலக அமைதியின் மேல் அவ்வளவு அக்கறையா? அருட்பெருங்காதலா? தாங்களே உலகை ஒட்டு மொத்தமாக அழித்து ஒழிக்கக் குத்தகை எடுத்துக் கொண்டாற் போல் கொக்கரிக்கும் அந்நாடுகள்தாம் பிற நாடுகள் ஆக்கவழிக்கு அறிவியலில் தலைப்படுவதையும் தடுக்கத் தலைப்படுகின்றன.

அமைதியைக் காக்க விரும்புபவன் எப்படி இருக்க வேண்டும்? அமைதியாளனாக இருக்க வேண்டும் அல்லவோ?

நான் மட்டும், அடாவடித்தனமே உருவாகத் திரிவேன்! நீ மட்டும் அதனைக் கண்டு கொள்ளாது அடங்கி அமைத்து கிடக்க வேண்டும் என்றால் எப்படிப்பட்ட நடுநிலைப் பார்வை?

இதோ பாருங்கள் ஒரு செய்தி, உலகுக்கு அமைதி காட்டும் அருமை முன்னோடிகளின் அழகுக் காட்சி! அந்த முன்னோடி களுக்குள்ளேயே கரவுத் திட்டங்கள்! உலகை அழிப்பதில் ஒருவருக்கு ஒருவர் இளைத்தவரா எனப் போட்டா போட்டி!

அணுக்கருவியை ஒடுக்குவோம் என முழங்கும், அமெரிக்காவுக்கும் உருசியாவுக்கும் இடையேயுள்ள போட்டி!

"நச்சுயிரிக் குண்டுகளைத் தலைவர் எல்சினும் அறியா வகையில் ஆக்கிவைத்துள்ளதாம் உருசியா! கூறுகிறது இலண்டன் இதழ்.

"நச்சுயிரிகளைப் பதப்படுத்திப் பொடியாக்கி, அதனையே குண்டுகளில் நிரப்பி, நடுவானில் வெடிக்கச் செய்தல் ஒருவகை; பொடியாகத் தூவுதல், மற்றொரு வகை,” இவ்விருவகைகளாலும் ஏற்படும் அழிவு எவ்வளவாம்?

200 கிலோ பொடியை வானில் தூவினால் தூவப்பட்ட ஒரு நொடியில் ஆம்; ஒரே ஒரு நொடியில் ஐந்து இலட்சம் பேர் இறந்து போவாராம்?

எவ்வளவு பேரருள்!