உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

97

உலகை நடுக்கும் அமெரிக்கா, உள் நடுக்கம் கொண்டு இருக்கிறதாம். இப்பொழுது இனி அடுத்து என்ன?

ஒரு நொடியில் பத்திலக்கம் பேரைக் கொல்லும் நச்சு ஆவியைக் கண்டு பரப்பத் துணியும் அமெரிக்கா! சும்மா இருக்குமா?

சந்தை விலை இறங்கி விடக்கூடாது என்பதற்காகத் தேயிலையையும், கோதுமையையும் கடலிலே கப்பல் கப்பலாகக் கொட்டிக், கடலை நாறச்செய்து, கடல்வாழ் உயிரிகளைச் சாகடித்து மேலும் நாறச்செய்து, அந்நாற்றம் தாங்காமல் வானில் பறக்கும் பறவைகளும் செத்துச் செத்துச் விழச் செய்த வன்கொடுமை வல்லரசுகள் இவற்றைச் செய்யத் தயங்குமா?

பல்கோடி ஆண்டாக இயல்பான வகையால் இயற்கை உருவாக்கித் தந்த உலகை, நொடிப் பொழுதிலே அழித்துத் துடைக்க வல்ல அழிவியலுக்குப் பெயர் அறிவியலா? அழிவாளன் கயமையால் அருமைக்கு அருமையாம் அறிவு அடையும் இழிவு ஈது!

அறிவியலோடு அருளியலும் அமைந்த சான்றோர், இவ் வழிவுக் கூட்டத்தை அழிவுக் கருவியைக் கண்டு பிடிக்கும் கூட்டத்தை, அறிவியலை அழிவியலுக்கு ஆக்கும் வெறி விலங்குக் கூட்டத்தைக் கண்டிக்கவும், இடித்துரைத்துத் திருத்தவும் வேண்டும். ல்லாக்கால் அப்பழி அறிவாளர்களையும் சாரவே செய்யும். நாடுதோறும் அறிவாளர் கூட்டம் கிளர்ந்து அழிவியலைத் தடுத்தால் அல்லாமல்.

அறிவியல் தன் களங்கத்தில் இருந்து விடுதலை பெற இயலவே இயலாது!

அறிஞர் உலகம் எண்ணுமாக!

உலகைக் காக்குமாக!