உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. கேட்டதும் கிடைத்ததும்

திருக்குறள் ஆய்வு இக்கால் பெருகி வருகிறது; அவ்வாய் வில் ஆடவர் மகளிர் எனப் பால்வேறுபாடு இல்லாமல் ஈடுபட்டுள்ளமை மகிழ்வாகின்றது. ஆனால், அம்மகிழ்வு வள்ளுவத்தை முழுதுறப் பாராமல் முனைப்பாகவும் தடிப்பாக வும் உள்ளொன்று வைத்து வெளியொன்றாக எழுதப்படும் போதும் பேசப்படும் போதும் வாய்மை நெஞ்சத்தை வாட்டு வதாக அமைந்துவிடுகின்றது.

26.191இல் தினமணித் தமிழ்மணியில் "வள்ளுவம் காட்டும் ஆண் ஆதிக்கச் சமூகம்" என வெளிவந்த கட்டுரை அவ்வகையில் ஒன்று. அதனை மறுத்து வள்ளுவம் பெண்ணுரிமைக்கே வழி காட்டுகிறது என ஒரு கட்டுரை பெப்ருவரித் திங்களில் வெளிவந்தது. வள்ளுவரின் சமநோக்கு என்றோரு கட்டுரை மார்ச்சுத் திங்களில் வெளிவந்தது. 30.8.92 இல் 'ஒரு கோரிக்கை’ என்னும் தலைப்பில் மற்றொரு பெண்மணியாரின் கட்டுரை தமிழ்மணியில் வெளிவந்தது. 'வள்ளுவத்தில் கரும்புள்ளி உண்டு என்றும், பெண்பாலுக்கு ஒப்புரிமை தராப்பகுதி அஃது' என்றும் கூறியது அது. அதனை ஒட்டியும் வெட்டியும் எழுதியவை தொடர்ந்து வந்து கொண்டுள்

வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் அவருக்கு ஒப்பாகப் பெண்ணை மதித்துப் போற்றி ஒப்புரவுச் செப்பப் புலமையர் உலகளாவிய பரப்பில் ஒருவரும் இருந்திலர் என்பது உண்மையாக இருக்கவும் அதனை முழுத்தோதாது நுனிப்புல் மேய்ந்து தம் நுண்ணறிவுத் திறம் ஈதெனத் தம்மைத்தாமே பாராட்டிக் கொள்வார் எழுத்தை மறுத்து மெய்ம்மை நாட்டல் வேண்டத்தக்க ஒன்றாம்.

திருக்குறள் களஞ்சியமாய், நடமாடும் வள்ளுவமாய்த் திகழ்ந்த பதின்கவனகர் திரு.பெ. இராமையா அவர்கள் பேரொளி காட்டி முன்னின்றார். அவரினும் குறளை ஓதிய ஒருவர் உலகில் உண்டோ? திருக்குறள் பற்றி மாறுகருத்தும் ஒப்புக் கருத்தும் உரைத்தார் இந்தக்கட்டுரை எழுதுவார் ஆகிய எவரும் அவர்முன் நிற்றற்கும் தகுதி உடையவர் ஆவரோ?